தகவல் தொடர்பு தலைமை கமிஷனர் நியமனம்
பெங்களூரு; மாநில தகவல் தொடர்பு தலைமை கமிஷனராக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆசித் மோகன் பிரசாத்தை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நியமித்து உள்ளார்.கர்நாடக நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:மாநில தகவல் தொடர்பு தலைமை கமிஷனராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., ஆசித் மோகன் பிரசாத், தலைமை கமிஷனர்களாக ராமன், ஹரிஷ்குமார், ருத்ரண்ணா ஹர்திகோட், நாராயண் சணல், ராஜசேகர், பக்ரூதீன், ஓய்வு ஐ.ஏ.எஸ்., மமதா ஆகியோர், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.தலைமை கமிஷனர், கமிஷனர் பதவிக்கு 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை கமிஷனர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.