உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்காலியும், வங்கதேச மொழியும் ஒன்றா? திரிணமுல் காங்., - பா.ஜ., வார்த்தைப்போர்!

பெங்காலியும், வங்கதேச மொழியும் ஒன்றா? திரிணமுல் காங்., - பா.ஜ., வார்த்தைப்போர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பெங்காலி'யை வங்கதேச மொழி என டில்லி போலீஸ் குறிப்பிட்டதாக திரிணமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பா.ஜ.,வும் பதிலடி கொடுத்துள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பெங்காலி மொழி பேசப்படுகிறது. இது ஒரு காலத்தில் நம் நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்தது. வங்கதேசத்தை ஒட்டியுள்ள மேற்கு வங்கத்திலும், பெங்காலியே பரவலாக பேசப்படுகிறது. தடுப்பு காவல் பா.ஜ., ஆளும் டில்லி, குஜராத், ம.பி., - உ.பி., - ஒடிஷா போன்ற மாநிலங்களில், பெங்காலி பேசும் மக்கள் குறிவைத்து துன்புறுத்தப்படுவதாகவும், உரிய ஆவணங்கள் இருந்தும் வங்கதேசத்தவர் எனக்கூறி அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதாகவும், சமீபகாலமாக, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி வருகிறார். சமீபத்தில், டில்லியில் சட்ட விரோதமாக வசித்த எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெங்காலி பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் வங்கதேசத்தவராக இருக்கலாம் என சந்தேகித்த விசாரணை அதிகாரி, 'வங்கதேச தேசிய மொழியின் மொழிபெயர்ப்பாளர் தேவை' என உயரதிகாரி களுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: பெங்காலியை வங்கதேச மொழி என டில்லி போலீசார் குறிப்பிட்டுஉள்ளனர். அவமதிக்கும் செயல் இது, பெங்காலி பேசும் இந்தியர்களை அவமதிக்கும் செயல். நம் நாட்டின் தேசிய கீதம், தேசிய பாடல் ஆகியவை பெங்காலியில் எழுதப்பட்டுள்ளன. அப்படியிருக்கையில், பெங்காலியை வங்கதேசத்தின் தேசிய மொழி எனக் குறிப்பிடுவது, அரசிலயமைப்புக்கு விரோதமானது. பெங்காலி மக்களுக்கு எதிரான பா.ஜ., அரசுக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பொய் சொல்கிறார்! டில்லி போலீசாரின் கடிதத்தில் எந்த இடத்திலும், வங்கதேச மொழி பெங்காலி என குறிப்பிடப்படவில்லை. மம்தா பானர்ஜி தான் இந்த விவகாரத்தில் பொய் சொல்கிறார். மேற்கு வங்கத்தில் பேசப்படும் பெங்காலிக்கும், வங்கதேசத்தின் பெங்காலிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளன. - அமித் மாள்வியா ஐ.டி., பிரிவு தலைவர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை