உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பத்திரிகையாளர்கள் அடிமைகளா: ராகுல் கருத்துக்கு மும்பை பிரஸ் கிளப் கண்டனம்

பத்திரிகையாளர்கள் அடிமைகளா: ராகுல் கருத்துக்கு மும்பை பிரஸ் கிளப் கண்டனம்

மும்பை: ''பத்திரிகையாளர்கள், அடிமைகளாக இருக்கின்றனர்,'' என்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதற்கு, மும்பை பிரஸ் கிளப் கண்டனம் தெரிவித்துள்ளது.மும்பை பிரஸ் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கை:மஹாராஷ்டிர மாநிலம் அமராவதியில் நடந்த தேர்தல் பேரணியில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் , பணிபுரியும் பத்திரிகையாளர்களைப் பற்றி, ஆளும் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு இருப்பதாகவும், அடிமைகள் என்றும் பேசினார்.பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கான அடிப்படைக் காரணங்களையும், ஒட்டுமொத்த பத்திரிகை துறையின் நிலையையும் ராகுல் எப்போதாவது சிந்தித்திருக்கிறாரா? ஊடகங்கள் மீதான தற்போதைய அரசின் எதேச்சதிகாரப் போக்குகளால் உருவாகும் சவால்களை நாங்கள் ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், ராகுல் ஊடகவியலாளர்களை மீண்டும் மீண்டும் குறிவைப்பதைக் காண்கிறோம்.பத்திரிகையாளர்கள் மீது உண்மையிலேயே அவருக்கு அக்கறை இருக்குமானால், அவர் ஊடக உரிமையாளர்களைத்தான் குறை கூறியிருக்க வேண்டும்.பணிபுரியும் ஊடகவியலாளர்கள் மீதான எதிர்க்கட்சித் தலைவரின் உயர்வான அணுகுமுறையை நாங்கள் மிகவும் கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கிறோம். பிரதமர் மோடி, பத்திரிகையாளர் சந்திப்புகளை தவிர்ப்பது குறைகூறப்படும் அதே வேளையில், ராகுல் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.இவ்வாறு மும்பை பிரஸ் கிளப் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M Ramachandran
நவ 18, 2024 20:48

ராகுல் ஒரு விஷய ஞ்சானம் இல்லாத சிறு குழந்தை. குழந்தை பேத்துவதை ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சோனிய்யா இருக்கிறார். அறியா குழந்தை விட்டு விடுங்கள்.


Ramesh Sargam
நவ 18, 2024 19:41

உங்கள் ஆட்சியில் மரியாதைக்குரிய, மெத்தப்படித்த அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கை நீங்கள் எப்படி வைத்திருந்தீர்கள்?


சமீபத்திய செய்தி