உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகளிர் உதவி தொகைக்கு மட்டும் நிதி இருக்கா? : உச்சநீதிமன்றம் கேள்வி

மகளிர் உதவி தொகைக்கு மட்டும் நிதி இருக்கா? : உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: மகளிர் உதவித்தொகை போன்ற இலவச திட்டத்திற்கு நிதி இருக்கு... ஆனால் நிலத்தை இழந்தவர்களுக்கு இழப்பீடு தர நிதி இல்லையா என மஹாராஷ்டிராவில் சிவசோனா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.மஹாராஷ்டிராவில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் ஆராய்ச்சி அமைப்பு ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளது.இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை 13-ம் தேதி நிலத்தை அவர்களிடமே ஒப்படைக்க அல்லது நிலத்தை இழந்தவர்களுக்கு மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்யாததால், நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது,மகளிர் உதவித்தொகை போன்ற இலவச திட்டத்திற்கு மாநில அரசிடம் நிதி இருக்கு ஆனா நிலத்தை இழந்தவர்களுக்கு இழப்பீடு தொகை கொடுக்க நிதி இல்லையா ?நீதிமன்றத்தின் உத்தரவை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.இதற்கு உரிய பதில் தாக்கல் செய்ய வேண்டும் இல்லையெனில் தலைமை செயலரை வரவழைக்க நேரிடும். இவ்வாறு கூறிய நீதிபதிகள் ஆக.13-ம் தேதி வழக்கை ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Joe Rathinam
ஆக 09, 2024 09:00

அனைத்து கட்சிகளும் தங்களின் கட்சி மட்டுமே தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யும் முயற்சிகள்.


Ravi Kulasekaran
ஆக 08, 2024 20:51

உச்ச நீதிமன்றமே ஒரு சந்தேகம் ஆண் பெண் சமம் என்பது ஏட்டில் மட்டும் தான ஆண்களுக்கு தமிழக அரசு இலவச பேருந்து கொடுக்க வில்லை ஆனா கட்டணம் செலுத்தி இருக்கை இல்லை 1963 காலங்களில் ஆண்கள் பெண்கள் என்று எழுதி இருந்ததை நீக்க யாருக்கும் உரிமை இல்லை அவர்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் எங்கள் உரிமையை பறித்து அல்ல சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி நியாயம் வழங்க வேண்டும் எனக்கு நீதி வேண்டும்


PARTHASARATHI J S
ஆக 08, 2024 18:34

கருணாநிதி "கலைஞர் டீவி" கொடுத்து மக்களை கெடுத்தார். அல்பத்திற்கு அலையும் மக்கள். பொருத்தமில்லா இலவசத் திட்டங்களை ஆளுநரும், ஜனாதிபதியும் அனுமதிக்கூடாது. வரிச்சுமை குறைய இது ஒன்றே வழி.


அப்பாவி
ஆக 08, 2024 16:21

விவசாயிகளுக்கு 6000 ரூவா, உஜாலா திட்டங்களுக்கு நிதி கொட்டிக்கிடக்கு


Kanns
ஆக 08, 2024 15:25

Instead of Lectures, Start Punish Power Misusing Rulers, Stooge Officials esp Judges, Investigators& Vested False Complainant Gangsters women, SCs, unions/groups, advocates etc etc


GMM
ஆக 08, 2024 10:39

வரி மூலம் வசூலிக்கப்படும் கருவூல பணம் நிலமெடுப்பு, அபிவிருத்தி, சம்பளம், ஓய்வு ஊதியம்.. போன்ற செலவினங்களை எதிர்கொள்ள மட்டும். மகளிர் உதவி தொகை, உரிமை தொகை போன்று நேரிடையாக மத்திய அரசு, மாநில நிர்வாகம் தனி நபருக்கு வழங்க நிதி code ல் விதி இல்லை?. அதற்கு தான் முதல்வர் நிவாரண நிதி, தொண்டு நிறுவனங்கள் வரிவிலக்கு பெற்று செயல்பட அனுமதிக்க பட்டுள்ளது. மிக குறைந்த மக்கள் செலுத்தும் வரி, ஏழை எளிய மக்கள் உதவி என்று வாக்கு பெற நேரடி பண பட்டுவாடாவை நீதிமன்றம் தடுக்க முடியவில்லை என்றால், யாராலும் தடுக்க முடியாது.


sugumar s
ஆக 08, 2024 09:51

Same question applies here also. TN has money for magali and students 1000, pen installation, political leaders statue installation. but not money for social welfare activities.


Sampath Kumar
ஆக 08, 2024 09:39

திராவிட மாடல் இல்லாமல் எந்த கொம்பனும் ஆட்சி புடிக்கவும் முடியாது நடத்தவும் முடியாது


Velan Iyengaar
ஆக 08, 2024 08:25

திராவிட மாடல் அகில இந்தியாவுக்கும் வழிகாட்டி


Tetra
ஆக 08, 2024 11:48

ஊழல்தானே


sridhar
ஆக 08, 2024 08:24

A national consensus is urgently required to frame modalities for free or subsidised doles in any form. All the states are giving free money from the treasury for votes. This hampers development due to paucity of funds.


மேலும் செய்திகள்