உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் ஓய்வு பெறுவதற்காக காத்திருக்கிறீர்களா? மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி

நான் ஓய்வு பெறுவதற்காக காத்திருக்கிறீர்களா? மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

“நான் ஓய்வு பெற்ற பின்தான் வழக்கின் விசாரணை நடக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசிடம் காட்டமாக கேள்வி எழுப்பினார்.சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்காக இரண்டு முறை பட்டியலிடப்பட்டது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், வழக்கு விசாரணையை வேறு தினத்திற்கு ஒத்தி வைக்கும்படி கோரிக்கை வைத்தனர். அதை, தலைமை நீதிபதியும் ஏற்றுக்கொண்டு ஒத்திவைத்தார்.இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி, “இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜராக வேண்டிய தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி வேறு ஒரு முக்கிய வேலையில் இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும்,” என, மீண்டும் கோரிக்கை வைத்தார்.அதைக்கேட்டு அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி கவாய், “நான், நவம்பர் 24ம் தேதி ஓய்வு பெறுகிறேன். அதற்கு பின்தான் இந்த வழக்கைநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறதா? அப்படி எதுவும் இருந்தாலும் அதை வெளிப்படையாக கூறி விடுங்கள். வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தால் எப்போது இதை விசாரித்து முடிப்பது, எப்போது தீர்ப்பு எழுதி முடிப்பது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என, அதிருப்தியுடன் தெரிவித்தார்.- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 93 )

santha
நவ 16, 2025 14:04

வேறு குற்றவாளி தப்பித்தானா என்று வருத்தமாயிருக்கிறது


Vijayasekar
நவ 12, 2025 20:32

காத்து இருக்கிறோம்.


நிக்கோல்தாம்சன்
நவ 12, 2025 19:51

அரசு காத்திருக்கோ இல்லையோ பொதுமக்கள் நாங்க காத்திருக்கிறோம் .


Rathna
நவ 12, 2025 11:57

கோட்டுக்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து பல வருடங்கள் ஆகிறது. தீவிரவாத கேஸ்களை நீங்கள் நடத்தும் விதமே அதற்கு ஒரு மிக பெரிய சாட்சி. சீக்கிரம் சீட்டை காலி செய்யுங்கள்.


Rama SV
நவ 12, 2025 06:51

முதலில் ஏழை மக்கள் காத்திருக்கும் கேசுகளை முடி..


Sridhar
நவ 11, 2025 13:23

நாடே காத்துட்டுருக்கு


Ramalingam Shanmugam
நவ 11, 2025 11:01

எத்தனை கேஸ் இருக்கு அதை முடி உன் புத்தி எனக்கு தெரியும் என்று அர்த்தம்


Subramanian
நவ 08, 2025 13:53

நியாயமான நீதிபதியை இந்த கூட்டத்திற்கு எப்படி பிடிக்கும்.


Yuvaraj Velumani
நவ 11, 2025 09:21

கொத்தடிமை


c.mohanraj raj
நவ 07, 2025 21:15

இவரைப் போன்ற ஒரு மோசமான நீதிபதி இதுவரை பார்த்ததில்லை .


HoneyBee
நவ 07, 2025 17:21

எல்லாவற்றையும் ஏன் பிரச்சினையாக பார்க்கிறார்.


சமீபத்திய செய்தி