உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த சவாலையும் சந்திக்க ஆயுதப்படைகள் தயார்: ராஜ்நாத் உறுதி

எந்த சவாலையும் சந்திக்க ஆயுதப்படைகள் தயார்: ராஜ்நாத் உறுதி

கோல்கட்டா: '' உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வீரர்களின் தைரியம் காரணமாக, எந்த சவாலையும் சந்திக்க தயாராக இந்திய ஆயுதப்படைகள் தயாராக இருக்கின்றன, '' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.கோல்கட்டாவில் நடக்கும் முப்படை தளபதிகள் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தகவல், கருத்தியல் மற்றும் உயிரியல் போன்ற வழக்கத்துக்கு மாறான அச்சுறுத்தல்களில் இருந்து வெளிப்படும் கண்ணுக்கு தெரியாத சவால்களை சமாளிக்க ஆயுதப்படைகள் தயாராக இருக்க வேண்டும்.இன்றைய போர்கள் திடிரென ஏற்படுகின்றன. அது கணிக்க முடியாததாக உள்ளது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என கணிக்க முடியாததாக இருக்கிறது. அது இரண்டு மாதங்கள, ஓராண்டு மற்றும் ஐந்து ஆண்டுகள் கூட நீடிக்கும். இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நமது எழுச்சித் திறன்கள் போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.ஆப்பரேஷன் சிந்தூர் நமது வலிமை, திட்டமிடல் மற்றும் தன்னிறைவு இந்தியா என்ற மூன்று தூண்களை எடுத்துக்காட்டியதுடன், 21ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வலிமை சேர்ப்பதாக அமைந்தது. தைரியமிக்க நமது வீரர்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் எந்த சவாலையும் சமாளிக்கும் திறன் பெற்றுள்ளோம்.மற்ற அமைப்புகளுடன் ஆயுதப்படைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இது எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு முக்கியமானது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Saai Sundharamurthy AVK
செப் 16, 2025 23:04

பங்களாதேஷுக்குள் அமெரிக்க படைகள் நுழைய வாய்ப்பு என்று ஒரு செய்தி அடிபடுகிறது. இந்தியாவுக்கும், சீனாவின் ஆதிக்கத்திற்கு உள்பட்ட மியன்மாருக்கும் தொந்தரவு கொடுப்பதற்காக இருக்கலாம். ஏற்கனவே, பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஆசிம் முனீர் போன மாதம் ஒரு முழக்கத்தை கொண்டிருந்தார். அதாவது இந்தியாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடப் போவதாகவும், அந்த நடவடிக்கை இந்தியாவின் கிழக்கில் இருந்து ஆரம்பிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.எனவே, இந்திய ராணுவம் அதற்கேற்ற எதிரான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பங்களாதேஷ் பக்கமும், வங்காள விரிகுடா பக்கமும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். அமெரிக்காவின் நகர்வுகள் குறித்து இந்திய உளவுத்துறை உஷாராக இருக்க வேண்டும்.


Hindu
செப் 16, 2025 21:49

எதிர்க்கட்சிகளின் சவாலை சந்திக்க ஆயுதப்படைகளை பயன்படுத்தக்கூடாது . தங்கள் கொள்ளைகளை காக்கவும் பயன்படுத்தக்கூடாது


சமீபத்திய செய்தி