உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் விபத்துக்களை தடுக்கும் ‛கவச் தொழில்நுட்பம்: வைஷ்ணவ் உறுதி

ரயில் விபத்துக்களை தடுக்கும் ‛கவச் தொழில்நுட்பம்: வைஷ்ணவ் உறுதி

புதுடில்லி: 2030-க்குள் ரயில் விபத்துக்களை தடுக்கும் ‛‛கவச்'' தொழில்நுட்பம் நாடு முழுதும் செயல்படுத்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.அடிக்கடி ஏற்படும் ரயில் விபத்துக்களால் ரயில் பயணத்தின் பாதுகாப்பை, நுாறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், 'கவச்' என்ற தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தி வருகிறது, இந்நிலையில், ‛ கவச்' தொழில்நுட்பத்தின் கீழ் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்திற்குபட்ட , ராஸ்தானில் சவாய் மதுபூர் -இந்திரகார்க் இடையே ரயில் பாதையில் பரிசோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதனை மத்திய ரயில் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் துவக்கி வைத்து ரயிலில் பயணம் செய்து ஆய்வு செய்தார். இந்த பரிசோதனை முறை வெற்றிகரமாக செயல்பட்டதாக அஷ்வினி வைஷ்ணவ் ‛எக்ஸ்' வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 2030 டிசம்பருக்குள் ‛கவச்' தொழில்நுட்பம் நாடு முழுதும் செயல்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

‛கவச் ' செயல்படுவது எப்படி?

ரயில் இன்ஜின், ரயில் பாதை, சிக்னல் என மூன்றையும் இணைத்து உருவாக்கப்பட்டது தான் 'கவச்' தொழில்நுட்பம்.அதன்படி, ரயில் இன்ஜின் பகுதியில், சிறிய கருவி பொருத்தப்படும். ரயில் ஓடும் பாதையில் ஏதாவது தடை ஏற்பட்டிருந்தால், முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும். அதையும் மீறி, ஓட்டுனர் செயல்பட்டாலும், தடை ஏற்பட்டிருந்த பகுதிக்கு 50 மீ. முன்பாக, ரயில் தானாக நின்று விடும்.இதன் மூலம் கவச் தொழில்நுட்பம், இன்ஜின் வேகத்தை கட்டுப்படுத்தவும், நிறுத்தவும் கூடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

K.n. Dhasarathan
செப் 26, 2024 17:45

இந்த கவச பாதுகாப்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டு பல வருடங்களாகி விட்டன. இதுவரை எத்தனை தடங்களில் போடப்பட்டு உள்ளன ? இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கும் மத்திய அரசு எப்போதுதான் செயல்படும் ? மிக முக்கியமான அதி விரைவு ரயில்கள் செல்லும் இடங்களில் கவச உடனடியாக போடா வேண்டும், அடுத்து நாடு முழுதும் படிப்படியாக போடா வேண்டும், வைஷ்ணவ செய்வாரா ? அல்லது அடுத்த விபத்துக்காக காத்துக்கொண்டு உள்ளாரா ?


GoK
செப் 26, 2024 09:02

ரயில்கள் மோதல்களை தடுக்கும் தொழில் நுட்பம் சீனா, இந்தியா மற்றும் ஆசியா ஆப்பிரிக்கா நாடுகளின் தேவை அதனால் மேற்கத்திய நாடுகள் இதில் கவனம் செலுத்த மாட்டார்கள் முதலீடும் செய்யமாட்டார்கள். நாம்தான் நம் தேவையை சுய முயற்சியால் செயது கொள்ளவேண்டும். சுதந்திரத்தின் இந்த வந்த காங்கிரஸ் அரசு தன குடும்பம் ஊழல் இதில் கவனம் செலுத்தியதால் வந்த வினை இது. முழு முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.


முருகன்
செப் 26, 2024 11:00

இன்னும் காங்கிரஸை குறை கூறுவது நிறுத்தி விட்டு கடந்த பத்து வருட ஆட்சி காலத்தில் ஏன் கவச் கருவிகளை பெருத்த வில்லை என யோசிக்க வேண்டும்


Iyer
செப் 26, 2024 06:07

அரபி பேசும் நாடுகளான பால்ஸ்தீன் , லெபனான், துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகள் அமைதி இன்றி - கொலை கொள்ளை அதிகரித்து திண்டாடி தவிக்கின்றன. ஏனனில் இந்த நாடுகளில் இந்தியர்கள் வெகு குறைவேதான். அதே அரபி பேசும் நாடுகளான KSA, UAE, குவைத், கத்தார், பஹ்ரைன் ஓமான் போன்றவை அமைதியாகவும் செழித்து வருகின்றன. ஏனனில் இந்த நாடுகளை இந்தியர்கள் 50% அளவில் உள்ளனர்


Kasimani Baskaran
செப் 26, 2024 05:29

பல இடங்களில் நாசவேலை நடப்பது கட்டுப்படுத்தப்பட வேண்டும். இரயில் பாதை முழுவதும் செயற்கை நுண்ணறிவு காமிரா கட்டமைப்பு மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். நாச வேலை மூலம் பொது போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்தால் அது கொலை முயற்சி என்றே வகைப்படுத்தப்பட்ட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை