உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., முயற்சியை முறியடித்த வீரர்கள்: ராணுவ தளபதி பாராட்டு

பாக்., முயற்சியை முறியடித்த வீரர்கள்: ராணுவ தளபதி பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ தளங்களை பாதுகாத்த வீரர்களுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாராட்டு தெரிவித்து உள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் போர் நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி பஞ்சாபில் உள்ள உன்சி பஸ்சி மற்றும் காஷ்மீரின் பதன்கோட் விமானப்படை தளங்ளுக்கு சென்று வீரர்களுடன் கலந்துரையாடினார். மேலும் பிஎஸ்எப் வீரர்களையும் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது, விமானபடைதளங்களை மற்றும் ராணுவ தளங்களை பாதுகாத்த ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு பாராட்டுகள். ராணுவம் மற்றும் விமானப்பட தளங்களில் உள்ள முக்கியமான சொத்துகளை குறிவைத்து தாக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்ததற்கும் பாராட்டு. ராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
மே 16, 2025 03:56

மிகப்பெரிய சாதனை என்றுதான் சொல்லவேண்டும். உலக அரங்கில் இந்திய இராணுவத்தின் பெயரை பெரிய அளவில் கொண்டு சென்று இருக்கிறார்கள்.


சமீபத்திய செய்தி