உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; ராணுவ வீரர் வீரமரணம்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; ராணுவ வீரர் வீரமரணம்

ஸ்ரீநகர்: பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு, இன்று (ஏப்ரல் 24) காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர். இதில், ராணுவ வீரர் ஜந்து அலி ஷேக் வீரமரணம் அடைந்தார்.காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ds5j72dq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பயங்கரவாதிகளுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர். உதம்பூர் அருகே பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது என அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். அப்பாவி சுற்றுலா பயணிகளை கொன்ற, பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்த ராணுவத்தினர் போராடி வருகின்றனர். இதில், வைட்நைட் கார்ப்ஸ் படைப்பிரிவின் வீரர் ஜந்து அலி ஷேக் வீர மரணம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும் உயிரிழந்து விட்டார் என்று ராணுவம் அறிவித்துள்ளது. தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இது குறித்து ராணுவ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திய போது, ராணுவ வீரர் ஜந்து அலி ஷேக் வீர மரணம் அடைந்தார்.அவரது அசாத்திய தைரியமும், அவரது வீரமும் என்றும் மறக்க முடியாதது. துக்கத்தின் இந்த தருணத்தில் இறந்த குடும்பத்தினருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Narayanan Ganesan
ஏப் 24, 2025 17:10

டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம்.


Narayanan Ganesan
ஏப் 24, 2025 17:08

ஆக்கிரமிப்பு காஷ்மீரை நம்முடன் இணைப்பதே இறுதி தீர்வு .


vns
ஏப் 24, 2025 16:23

ராக்கெட் குண்டுகளை உபயோகப்படுத்தி நமது வீரர்களுக்கு ஒரு கீறல் கூட விழாமல் இந்த தீவிரவாதிகளைக் கொல்ல வேண்டும்.


R Dhasarathan
ஏப் 24, 2025 14:14

கடவுள் எங்கள் எல்லையை காக்கும் தெய்வங்களுக்கு துணை நிற்க பிரார்த்தனை செய்கிறோம்.


Krishna Renga
ஏப் 24, 2025 13:18

May his souls rest in Peace. God bless you and your family. Jaihind.


B MAADHAVAN
ஏப் 24, 2025 13:09

வீர மரணம் அடைந்த அன்னாரது ஆத்மா சாந்தியடைய அன்பு பிரார்த்தனைகள். உங்கள் தியாகம் எதிரிகளை அழித்து நம் தேசத்திற்கு வெற்றியை அள்ளித் தரட்டும். மீளா துயரத்தில் உள்ள உங்கள் குடும்பத்திற்கு துக்கத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய நல்ல சக்தியை தரவும் , உங்கள் குடும்பம் மேன்மேலும் வளர்ச்சியடையவும் அன்பு பிரார்த்தனைகள்.


Padmasridharan
ஏப் 24, 2025 12:36

உள்ளூர்ல அதிகார பிச்சை, லஞ்சம் வாங்கி அரசுக்கு அவலம் உண்டாக்கும் அதிகாரிகளை அங்கு அனுப்பி பயிற்சி கொடுத்து சண்டை போட விடலாம். இந்திய பாதுகாப்புக்கு சண்டை போடுபவர்கள் எங்கே. சாமானிய மக்களுக்கு பாதகம் விளைவிக்கும், பணத்துக்காக மொழி_மத கொள்கைகள் பேசி சண்டை போடுபவர்கள் எங்கே. இந்திய ராணுவ வீரர்களுக்கு வந்தனம். அதிகார பிச்சைக்காரர்களுக்கு வந்த தனம் karmã பலனை தரட்டும்


M. PALANIAPPAN, KERALA
ஏப் 24, 2025 11:51

வீர மரணம் அடைந்த வைட்நைட் கார்ப்ஸ் படைப்பிரிவின் வீரருக்கு ஆழ்ந்த இரங்கல், அண்ணாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்


Dharmavaan
ஏப் 24, 2025 11:31

தீவிரவாதிகள் எததனை பேர் என்று தெரியுமா


Dharmavaan
ஏப் 24, 2025 11:29

இது போன்ற இடங்களில் தீவிரவாதிகளை கன்டுபிடிக்க ஏன் இஸ்ரேல் உதவியை நாடக்கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை