உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லையில் ஊடுருவலை முறியடித்த ராணுவம்

எல்லையில் ஊடுருவலை முறியடித்த ராணுவம்

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு உள்ளது. இங்குள்ள கெரி செக்டாரின் பரத்காலா பகுதியையொட்டிய பாகிஸ்தான் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சிலர் நடமாடுவது தெரிந்தது. இதையறிந்த நம் ராணுவம் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால், ஊடுருவல்காரர்கள் பாகிஸ்தானை நோக்கி தப்பி சென்றனர். இதன் வாயிலாக எல்லை கட்டுப்பாடு கோடு வழியே காஷ்மீருக்குள் ஊடுருவும் முயற்சியை நம் ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாகவும், தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதே போல் ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சிலர் நடமாடுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

jss
ஜூன் 16, 2025 11:29

ஒரு இடத்தில் ஊடுறுவல் நடந்தால் எல் வீர்ர்களையும் அவ்விடத்திற்க்குவனுப்பக்கூடாது் இது ஒரு டைவர்ஷனரி டாக்டிக்ஸ். யாரோ ஒரு முக்கிய தீவிரவாதிகள் மற்றொரு இடத்தில் ஊடுறுவல் செய்வதற்க்கான வழி. இந்திய ராணுவத்திற்க்கு இத்தகைய சால்ஜாப்புகளைப் பற்றி நன்றாகவே தெரியும்


சமீபத்திய செய்தி