உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருங்கால மனைவிக்கு பாலியல் தொல்லை: ராணுவம் - சி.பி.ஐ., வார்த்தை மோதல்

வருங்கால மனைவிக்கு பாலியல் தொல்லை: ராணுவம் - சி.பி.ஐ., வார்த்தை மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர் : ஒடிசாவில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு, போலீஸ் ஸ்டேஷனில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில், ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் - சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் எம்.நாகேஸ்வர ராவ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.ஒடிசாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, புவனேஸ்வரில் உள்ள பரத்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, கடந்த 15ம் தேதி நள்ளிரவு, ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி புகார் அளிக்க வந்தனர். குடி போதையில் போலீசாரை தாக்கியதாக, ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவியை போலீசார் கைது செய்தனர். சில நாட்களுக்கு பின், அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.இதன் பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி, 'போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர்கள் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். என் வருங்கால கணவரான ராணுவ அதிகாரியை லாக்கப்பில் அடைத்தனர். என் ஆடைகளை போலீசார் கிழித்தனர்' என, குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரம் மாநில அரசியலில் புயலை கிளப்பியதை அடுத்து, இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிந்து, குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான வி.கே.சிங் - சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் எம்.நாகேஸ்வர ராவ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.சமூக வலைதளத்தில் வி.கே.சிங் வெளியிட்ட பதிவில், 'போலீஸ் ஸ்டேஷனில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி நடத்தப்பட்ட விதம் வெட்கக்கேடானது; கொடூரமானது. இந்த விவகாரத்தை ஒடிசா காவல் துறை கையாண்ட விதம் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டார்.இதற்கு பதிலளித்து, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் எம்.நாகேஸ்வர ராவ் வெளியிட்ட பதிவு:ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி குடி போதையில் போலீசாரிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். மேலும், போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதற்கு முன், இன்ஜினியரிங் மாணவர்களுடன் அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.ரத்த பரிசோதனை செய்யவும் அவர்கள் மறுத்து விட்டனர். ஒரு தனிப்பட்ட ராணுவ அதிகாரியின் செயல்களுக்காக, ஒட்டுமொத்த காவல் துறையை குற்றஞ்சாட்டுவது முறையற்றது. இந்த நிலைப்பாட்டை வி.கே.சிங் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.இதற்கிடையே, ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி, ஒரு குழுவினருடன் தகராறில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாதுகாப்பு!

புவனேஸ்வரில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் மோகன் சரண் மஜியை, பாதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி, அவரது வருங்கால மனைவி மற்றும் சிலர் சமீபத்தில் சந்தித்தனர். அப்போது, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதை ஏற்ற முதல்வர் மோகன் சரண் மஜி பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார். இதன்படி, ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு, தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று முதல் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

VENKATASUBRAMANIAN
செப் 26, 2024 08:08

காவல்துறை யில் உள்ள சில கருப்பு ஆடுகளால் அதன் மதிப்பு தரம் தாழ்ந்து போகிறது. இதை சரி செய்வதை விட்டு வீணாக வாதம் செய்வதில் எந்த பிரயோசனமும் இல்லை. அதே சமயம் ராணுவ அதிகாரி தவறு செய்திருந்தால சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
செப் 26, 2024 07:57

ராணுவம் சேவையாகப் பார்க்கப்படாமல் மது, மாது போதையில் ஈடுபட வாய்ப்பளிக்கும் துறையாகப் பார்க்கப்படுகிறதோ ???? அழகான பெண்கள் காவல் நிலையம் வந்தால் அவர்களை காவல்துறை வேறு விதமாக நடத்தும் அவலமும் இருக்கிறது .... இரு தரப்பு மீதும் தவறுள்ளது ..... பிரச்னை பெரிதாவது வெட்ககரமானது .....


Kasimani Baskaran
செப் 26, 2024 05:46

காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை. ஒரு சில அதிகாரிகள் தவிர பெரும்பாலானோர் பொது மக்களை மட்டுமல்ல அரசாங்க சேவையில் இருப்போரைக்கூட நல்ல முறையில் நடத்துவது கிடையாது. இராணுவத்தில் இருப்பவர்கள் பகல் முழுவதும் கடும் பணி செய்து இரவில் குடிப்பது சாதாரண விஷயம் - அப்படியே காவல் நிலையத்துக்கு போனால் அவர்கள் நிதானம் இழந்து அடாவடி செய்யும் சாதாரண பேட்டை ரவுடி போல சித்தரிக்கப்படுவது மிக அபத்தமானது. டாஸ்மாக் நடத்தலாம் - ஆனால் குடிப்பவர்கள் அயோக்கியர்கள் என்ற நிலைப்பாடு கேவலமானது.


Kirubakaran
செப் 26, 2024 16:30

யோக்கியர் சொல்லிட்டாரு. ராணுவத்தை மதிக்கிறோம், அதே நேரம் அவர்கள் செய்யும் அத்து மீரல்கள் குடிபோதையில் எதைவேண்டுமாலும் செய்து விட்டு, மிகை படுத்தி காவல்துறை மீது புகார் அழிப்பது அதிகமாகிவிட்டது. காவல்துறைக்கு சங்கம் இல்லாததாலும், அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் அடிமை படுவதாலும் விசாரிக்காமலே உடனே நடவக்கை எடுக்க பழக்கப்பட்டு விட்டது.


தாமரை மலர்கிறது
செப் 26, 2024 01:40

நாகேஸ்வர ராவ் சொல்வதில் உண்மை உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை