உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் கிராம பாதுகாப்பு குழுக்களுக்கு பயிற்சி: இந்திய ராணுவத்தின் புதிய முயற்சி

காஷ்மீரில் கிராம பாதுகாப்பு குழுக்களுக்கு பயிற்சி: இந்திய ராணுவத்தின் புதிய முயற்சி

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்முகாஷ்மீரில் கிராமங்களில் உள்ள பாதுகாப்பு குழுக்களுக்கு ராணுவத்தினர் சிறப்பு பயிற்சி அளித்துள்ளனர்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதால் இந்தியா, பாகிஸ்தான் இடையே உறவில் விரிசல் உருவாகி உள்ளதேடு பதற்றமும் எழுந்துள்ளது. இதுபோன்றதொரு தாக்குதல் நடக்கவே கூடாது என்பதற்காக கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.இந் நிலையில், ஜம்முகாஷ்மீரில் கிராமங்களில் உள்ள பாதுகாப்பு குழுக்களுக்கு ராணுவத்தினர் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். ரஜௌரி மாவட்டத்தில் உள்ள நெவ்ஷீரா செக்டாரில் இத்தகைய பயிற்சியை தொடங்கி உள்ளதாக ராணுவத்தினர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது; பதற்றமான எல்லை பகுதிகளில் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே இதுபோன்ற சிறப்பு பயிற்சியின் நோக்கம். அதே நேரத்தில் உள்ளூர் பகுதி மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு முயற்சியும் கூட. ஆயுதங்களை எப்படி கையாள்வது, எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பது போன்றவை அவ்வப்போது நடக்கும் அமர்வுகளில் சொல்லிக் கொடுக்கப்படும். பாதுகாப்புப் படையினருக்கு உதவிட, சொந்த கிராமங்களை பாதுகாக்க உள்ளூர் மக்களுக்கு ராணுவத்தினர் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கினர். எல்லைகளில் ஒரு வலுவான பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க, உள்ளூர் மக்கள் மற்றும் ராணுவத்தினர் இடையே ஒத்துழைப்பு மிக முக்கியமானது.இவ்வாறு அற்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ