உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் கைது : தேர்தல் ஆணையத்திடம் இண்டியா கூட்டணி புகார்

கெஜ்ரிவால் கைது : தேர்தல் ஆணையத்திடம் இண்டியா கூட்டணி புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கெஜ்ரிவால் கைதை கண்டித்து, இண்டியா கூட்டணி பிரதிநிதிகள் இன்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்தனர். மதுபான கொள்கை வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை காவல் 6 நாள் நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது.இந்நிலையில் லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி உள்ளதை அடுத்து கெஜ்ரிவால் கைதை கண்டித்துக்கு கண்டனம் தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையரை இண்டியா கூட்டணி கட்சி பிரதிநிதிகள் சந்தித்து, புகார் அளித்தனர். அதில் தேர்தல் நேரத்தில் பா.ஜ., அரசு அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்குடன் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது எதிர்கட்சிகளின் பிரசாரத்தை நசுக்க முயற்சிக்கும் செயல், சி.பி.ஐ., அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

வீட்டு சமையலுக்கு அனுமதி

அமலாக்கத்துறை காவலில் உள்ள கெஜ்ரிவால், தன் வழக்கறிஞர், மற்றும் குடும்பத்தினர், உறவினர்களை 30 நிமிடம் மட்டும் சந்தித்து பேசவும், வீட்டிலிருந்து சமைத்து கொண்டு வரப்படும் உணவை கெஜ்ரிவாலுக்கு வழங்கவும் அமலாக்கத்துறை அனுமதி அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பேசும் தமிழன்
மார் 23, 2024 12:59

அத்தனை முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார்.... அது தான் இப்படி கைது செய்து விசாரணை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது......சட்டம் சாமானியர்களுக்கு மட்டும் தான்.... பப்பு மற்றும் இவரை போன்ற ஆட்களுக்கு இல்லை என்ற மமதையில் இருந்தனர் !!!!


kulandai kannan
மார் 23, 2024 08:31

2022ல் இதே வழக்கில் கேஜிரிவால் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியது காங்கிரஸ். எல்லாம் வாஷிங் மெஷின்தான்.


Kasimani Baskaran
மார் 23, 2024 05:45

இந்திக்கூட்டணி இருப்பதாக சொல்வதே அபத்தம் கூட்டணிக்கு இன்று தலைவர்கள் ஒருவரும் இல்லை மம்தாவும் கேஜிரிவாளும் தனித்தனியாகத்தான் கும்மியடிக்கிறார்கள்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ