உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாயை அடித்து கொன்ற தந்தை வரைந்து காண்பித்த மகளால் கைது

தாயை அடித்து கொன்ற தந்தை வரைந்து காண்பித்த மகளால் கைது

ஜான்சிமனைவியை அடித்துக் கொன்று தற்கொலை என நாடகமாடிய தந்தையை, 5 வயது மகள் ஓவியம் வரைந்து காட்டிக் கொடுத்தார். கணவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறு ஆண்டுகள்

உ.பி.,யின் ஜான்சியைச் சேர்ந்த சந்தீப் புதோலியா என்ற மருத்துவ பிரதிநிதிக்கும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சோனாலி என்ற, 28 வயது பெண்ணுக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.திருமணம் நடந்ததில் இருந்தே, அந்த பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு, கணவன் வீட்டார் சித்ரவதை செய்து வந்தனர். ம.பி.,யின் திகம்கார் என்ற இடத்தை சேர்ந்த சஞ்சீவ் திரிபாதி, தன் மகளிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய மருமகன் வீட்டார் மீது போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த திங்கள் இரவு, ஜான்சியில் இருந்த சோனாலி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் வீட்டார் தெரிவித்தனர். அதை நம்பாத சஞ்சீவ் திரிபாதி மற்றும் உறவினர்கள், உ.பி., மருத்துவமனையில், கணவர் வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் தான், தன் மகள் சோனாலியை அடித்துக் கொன்றதாக கூறினர்.இதனால் இந்த விவகாரம், போலீசுக்கு சென்றது. போலீசார் இரு தரப்பிலும் விசாரித்தனர். அப்போது, சந்தீப் புதோலியா - சோனாலி தம்பதியின், 5 வயது மகள், தர்ஷிகா 'ஸ்கெட்ச்' ஒன்றை வரைந்து போலீசாரிடம் கொடுத்தார்.

முதல் குற்றவாளி

அதில், தன் தாயை, தந்தை சந்தீப், கழுத்தை நெரித்து அடித்துக் கொன்று துாக்கிலிட்டதை காட்சிப்படுத்தி இருந்தார்.அந்த ஓவியத்தின்படி விசாரணை நடத்திய போலீசார், முதல் குற்றவாளியான, அந்த பெண்ணின் கணவர் சந்தீப்பை கைது செய்தனர். அவரின் தாய் வினிதா, மூத்த சகோதரர் கிருஷ்ணகுமார், இறந்த பெண்ணின் நாத்தனார் மனிஷா மற்றும் அடையாளம் தெரியாத சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி