மேலும் செய்திகள்
சச்சின் போல வைபவ் சூர்யவன்ஷி சாதனை: சசிதரூர் பாராட்டு
2 hour(s) ago
இறந்த நிலையில் சமூகம்: ராகுல் கருத்தால் மீண்டும் சர்ச்சை
3 hour(s) ago | 15
ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில், ரயிலில் அடிபட்டு காலை இழந்த கன்றுக்குட்டிக்கு, செயற்கை கால் பொருத்தப்பட்டது.தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கோ சாலை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், மேய்ச்சலுக்கு பசுக்கள், கன்றுக்குட்டிகள் சென்றன. ரயில் தண்டவாளத்தில் சில கால்நடைகள் சென்று கொண்டிருந்தன. அப்போது அவ்வழியாக வந்த ரயிலின் சத்தம் கேட்டு கால்நடைகள் ஓடின.ஆனால், ஒரு கன்றுக்குட்டி மட்டும் ரயிலில் அடிபட்டு, பின்பக்கத்தின் இடது காலை இழந்தது. தகவல் அறிந்த அமைப்பினர், கன்றுக்குட்டியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து பிழைக்க வைத்தனர்.பின்பக்க காலை இழந்து நடக்க சிரமப்பட்ட கன்றுக்குட்டிக்கு, செயற்கை கால்கள் பொருத்த முடிவு செய்தனர். இது தொடர்பாக மகாவீர் மூட்டு மையத்தில் தொடர்பு கொண்டு, செயற்கை கால் பொருத்தினர். தற்போது கன்றுக்குட்டி, முன்பு போன்று நடக்க துவங்கி உள்ளது.'கன்றுக்குட்டி வளர வளர, அதன் எடைக்கு ஏற்ப செயற்கை கால் மாற்றப்படும்' என அமைப்பினர் தெரிவித்தனர்.
2 hour(s) ago
3 hour(s) ago | 15