உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அருண்குமார் புத்திலா சுயேச்சையாக போட்டி

அருண்குமார் புத்திலா சுயேச்சையாக போட்டி

மங்களூரு: தட்சிண கன்னடா லோக்சபா தொகுதியில், ஹிந்து அமைப்பின் அருண்குமார் புத்திலா சுயேச்சையாக போட்டியிடுவதாக, அறிவிப்பு வெளியாகி உள்ளது.கர்நாடகா சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தட்சிண கன்னடாவின் புத்துார் தொகுதியில், புத்திலா ஹிந்து அமைப்பின் அருண்குமார் புத்திலா, பா.ஜ., 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால், ஆஷா திம்மப்பாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.தனக்கு 'சீட்' கிடைக்காமல் போனதற்கு, தட்சிண கன்னடா தொகுதி பா.ஜ., -- எம்.பி., நளின்குமார் கட்டீல் தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். பா.ஜ.,வின் ஓட்டுகள் பிரிந்ததால், காங்கிரஸ் வேட்பாளர் அசோக்குமார் ராய் வெற்றி பெற்றார். அருண்குமார் புத்திலா இரண்டாவது இடம் பிடித்தார். பா.ஜ., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.லோக்சபா தேர்தலில் தட்சிண கன்னடாவில் சுயேச்சையாக போட்டியிட, அருண்குமார் புத்திலா தயாராகி வந்தார். சட்டசபை தேர்தல் போன்று, ஓட்டுகள் பிரிந்து, காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக, அருண்குமார் புத்திலாவிடம், பா.ஜ., தலைவர்கள் பேச்சு நடத்தினர்.“நளின்குமார் கட்டீலுக்கு மீண்டும் 'சீட்' தரக் கூடாது; புத்துார் பா.ஜ., மண்டல் தலைவர் பதவியை எனக்கு வழங்க வேண்டும்,” என, அருண்குமார் புத்திலா கோரிக்கை வைத்தார். இதற்கு பா.ஜ., தலைவர்களிடம் இருந்து, உரிய பதில் கிடைக்கவில்லை.இதையடுத்து, “தட்சிண கன்னடா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக அருண்குமார் புத்திலா போட்டியிடுவார்,” என, புத்திலா சங்க தலைவர் பிரசன்னா மார்த்தா நேற்று அறிவித்தார்.“புத்திலா சங்கம் சார்பில், ஹிந்து அமைப்பினரை ஒருங்கிணைக்கும் பணிகள் நடக்கிறது. சமூக வலைத்தளம் மூலம், அருண்குமார் புத்திலாவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கப்படும்” எனவும் பிரசன்னா கூறி உள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜ.,வில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ