உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசிகள் கள்ள ஓட்டு போடுவதை அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரிக்கிறார்

வங்கதேசிகள் கள்ள ஓட்டு போடுவதை அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரிக்கிறார்

சாணக்யாபுரி:“போலி வாக்காளர்களை அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புகிறார். வங்கதேச முஸ்லிம்கள் அல்லது ரோஹிங்கியாக்கள் அல்லது போலி வாக்காளர்களை காப்பாற்ற விரும்புவதை கடந்த பத்து ஆண்டுகளில் அவர் பல முறை நிரூபித்துள்ளார்,” என, பா.ஜ., மாநில தலைவர் விரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:போலி வாக்காளர்களை அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புகிறார். வங்கதேச முஸ்லிம்கள் அல்லது ரோஹிங்கியாக்கள் அல்லது போலி வாக்காளர்களை காப்பாற்ற விரும்புவதை கடந்த பத்து ஆண்டுகளில் அவர் பல முறை நிரூபித்துள்ளார்.கடந்த 2018ம் ஆண்டில், ராஜ்யசபாவிற்கு பிரமாணப் பத்திரம் அளித்தபோது,​சஞ்சய் சிங் சுல்தான்பூர் முனிசிபல் கவுன்சிலின் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதே நேரத்தில் ஹரிநகர் சட்டசபை தொகுதிக்கு வாக்காளர் பட்டியலிலும் அவர் பெயர் இருந்தது.வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த சஞ்சய் சிங், தேர்தல் ஆணைய அதிகாரிகளையே மிரட்டி வருகிறார். தன் மனைவி அனிதா சிங்கின் பெயர், சுல்தான்பூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 2024 ஜனவரி 4 அன்று நீக்கப்பட்டதாக சஞ்சய் சிங் கூறினார்.அதே ஜனவரி 8ம் தேதி அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அனிதாவின் பெயர் சுல்தான்பூர் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ள ஓட்டளித்த சஞ்சய் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தேர்தல் ஆணையம் மற்றும் டில்லி காவல்துறையை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர் சந்திப்பு

மாநில பா.ஜ., - எம்.பி.,க்கள், நேற்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் மனோகர் லால் கட்டாரை சந்தித்து, முக்கிய வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வலியுறுத்தி, தலைநகரை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவதற்கான திட்டத்தை சமர்ப்பித்தனர்.இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.,க்கள், மெட்ரோ இணைப்பை விரிவுபடுத்துதல், நமோ பாரத் வழித்தடங்களை விரைவுபடுத்துதல், குடிசைவாசிகளுக்கான வீட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் முறையிட்டதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !