உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசூதி கல்வெட்டில் அசோகா சின்னம் சேதம்; ஜம்மு - காஷ்மீரில் பரபரப்பு

மசூதி கல்வெட்டில் அசோகா சின்னம் சேதம்; ஜம்மு - காஷ்மீரில் பரபரப்பு

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், ஹஸ்ரத்பால் மசூதியில் புனரமைப்பு பணிகள் முடிந்து வைக்கப்பட்ட கல்வெட்டில் இடம்பெற்ற, தேசிய சின்னமான, 'அசோகா' சின்னம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஸ்ரீநகர் மாவட்டத்தில், பிரபல ஹஸ்ரத்பால் மசூதி உள்ளது. சமீபத்தில் இங்கு புனரமைப்பு பணிகள் நடந்தன. இதையடுத்து, புதுப்பிக்கப்பட்ட கல்வெட்டு மசூதியில் வைக்கப்பட்டது. அதில், அசோகா தேசிய சின்னம் இடம் பெற்றது. இதையறிந்த அப்பகுதி மக்கள், ஹஸ்ரத்பால் மசூதிக்கு வந்து, கல்வெட்டில் இடம்பெற்ற அசோக சின்னத்தை சேதப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அசோகா சின்னம் சேதப்படுத்தப்பட்டதை வரவேற்ற முதல்வர் ஒமர் அப்துல்லா, “மத வழிபாட்டு தலத்தில், அசோக சின்னத்தை வைக்க வேண்டிய அவசியம் என்ன? மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது. இந்த விவகாரத்தில் பொது பாதுகாப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டது ஏன்?” என, கேள்வி எழுப்பினார். அசோக சின்னம் சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, “ஹஸ்ரத்பால் மசூதி கல்வெட்டில் இருந்த அசோக சின்னம் சேதப்படுத்தப்பட்டது கண்டனத்துக்குரியது. இது வருத்தம் அளிக்கிறது. ''அசோகா சின்னம் நம் இறையாண்மை மற்றும் தேசிய பெருமையின் சின்னம். இது போன்ற செயல்கள் நம் தேசிய உணர்வுகளைப் புண்படுத்துகின்றன. இதை பொறுத்துக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Barakat Ali
செப் 08, 2025 13:48

தேசபக்தியை யாருக்கும் ஊட்டிவிட முடியாது.. அவரவர்க்கு இயற்கையான உணர்வு வேண்டும் .......


ManiMurugan Murugan
செப் 08, 2025 00:01

ஓமர அவர்களுக்கு சின்னத்திற்கும் மதத்திற்கு ம் என்ன சம்பந்தம் உள்ளது அவரைுக்கே ்ந்தியர் என்ற பற்று இல்லை என்றே தோன்றுகிறது


c.mohanraj raj
செப் 07, 2025 12:07

காஷ்மீரில் எவ்வளவு பண்டித்துகள் இருந்த மாநிலம் இப்போது ... நிறைந்த மாநிலமாக உள்ளது


Rathna
செப் 07, 2025 11:12

ஜிஹாதிகள் ஒற்றுமையாக வாழ்ந்ததாக உலக அளவில் சரித்திரம் இல்லை. நாட்டை மதிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு காபிர்கள் நாட்டில் அவசியம் இல்லை. அந்த நாட்டை மாற்றுவதே அவர்களின் மத வழியில் சொல்லப்பட்டுள்ளது என்று அம்பேத்கர் சொன்னார்.


SULLAN
செப் 07, 2025 13:39

ஆதாரம் கேட்டால் சேதாரம் ஆகி விடுவாய் ரத்னா? சங்கி என்றாலே பொய் என்று நிரூபிக்கும் மற்றுமொரு கருத்து.


ஆரூர் ரங்
செப் 07, 2025 11:05

அது சரி. அசோக இலச்சினை உடைய ரூபாய்த் தாள்களை மசூதியின் உள்ளே அனுமதிக்க மறுப்பதில்லையே. காசு பணம் துட்டு மணி மணி.


ஆரூர் ரங்
செப் 07, 2025 11:04

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சுதந்திரதின விழாவில் தேசீயக்கொடி ஏற்றுகிறார்கள். மசூதிகளில் இது சாத்தியமா? அவர்களுக்கு தாய்மண்ணை விட பாலைவன மண்ணே புனிதமா?


GMM
செப் 07, 2025 10:58

தேசிய சின்னம் அவமதிப்பு தேச அவமதிப்பு. இவர்கள் ஓட்டுரிமை, குடியுரிமையை ரத்து செய்து அகதி அந்தஸ்து ஆக்க வேண்டும். நீதியின் பார்வை அரசியல் சாசனம் மீது இருக்க வேண்டும். அரசியல் மீது இருக்க கூடாது. மத சார்பின்மை என்ற நாளில் இருந்து சிறுபான்மை அந்தஸ்து தானே செயல் இழந்து விட வேண்டும். அரசியல் சாசனம் சிறுபான்மை, பெரும்பான்மை என்று எழுத படாத போது நீதிமன்றம் எந்த ரூபதிலும் அனுமதிக்க கூடாது. நீதிமன்றம் இரட்டை தீர்வை அங்கீகரிக்க கூடாது.


ஆரூர் ரங்
செப் 07, 2025 09:56

அல்லாஹ் வைத் தவிர வேறு ( நபிகளார் உட்பட).எவரையும் வணங்க கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. சவூதியில் நபிகளார் பிறந்த மிலாடி நபி கொண்டாடுவதில்லை. அவர் சமாதியில் தொழுகைக்கு அனுமதில்லை. அப்படியிருக்க இந்த ஹஜ்ரத்பல் மசூதியில் நபிகளாரின் தலைமுடியை வைத்திருப்பது எப்படி இஸ்லாத்துக்கு ஒத்து வரும்? ஆக இஸ்லாமியர்களே முழுமையாக பின்பற்றுவதில்லையா?


Artist
செப் 07, 2025 10:40

அது காணாம போய் கிடைத்த ஒன்றை இது தான் என்று காண்பித்து அதுக்கும் ஒரு மரியாதை ..


Rathna
செப் 07, 2025 11:08

நபியின் வழி வந்தவர்களின் அனைத்து சமாதிகளை சவூதி அரசு இடித்து தள்ளியது. இப்ராஹிம் வழி வந்தவர்கள் ஷியா என்பதால் அனைவரின் சமாதியும் இதில் அடக்கம்.


Tamilan
செப் 07, 2025 09:45

In Tamil Nadu, the government installs a plaque in front of every temple, sometimes right on the front facade of the Gopuram. This happens in temple functions where there is zero contribution from the government. Where are these fellows now, can they do this in other religious places or raise their voice now?


தத்வமசி
செப் 07, 2025 09:22

மத வழிபாட்டு தலத்தில், அசோக சின்னத்தை வைக்க வேண்டிய அவசியம் என்ன? மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது. - அறநிலையத் துறைக்கு கேட்டுச்சா? இதற்கு ஒரு மந்திரி இருக்கிறாரே அவருக்காவது இந்த விவரம் தெரியுமா ? காதில் நன்றாக கேட்டுச்சா? இது பற்றி இவர்கள் தங்களின் திருவாயை திறந்து ஏதாவது பேசுங்களேன். இது அறநிலையத்துறையின் கட்டுப்பாடு. அரசின் கட்டுப்பாட்டில் தான் எல்லாம் உள்ளன என்று பேசித்தான் பாருங்களேன். பேசினால் என்ன நடக்கும் என்று இவர்களுக்கு தெரியும். பம்மாத்து வேலையெல்லாம் இளிச்ச வாயன் இந்துக்களிடம் தான். இவனுங்களுக்கு ஓட்டு போடும் இளிச்சவாயன்கள் இந்துக்களை சொல்ல வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை