உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்வு எழுத சென்ற அசாம் பெண்: உத்தரகாண்டில் சடலமாக மீட்பு

தேர்வு எழுத சென்ற அசாம் பெண்: உத்தரகாண்டில் சடலமாக மீட்பு

புதுடில்லி: டில்லியில் நடைபெற்ற ரயில்வே வாரிய தேர்வுக்கு சென்ற அசாமை சேர்ந்த 20 வயது பெண், 5 நாட்களுக்கு பிறகு உத்ரகாண்ட் மாநிலத்தில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள சோண்டிலா ஹோஜாய் கிராமத்தை சேர்ந்த ரஸ்மிதா ஹோஜாய், கடந்த 5 ஆம் தேதி ரயில்வே வாரிய தேர்வுக்கு சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே, ரஸ்மிதா ஹோஜாய் தனது குடும்பத்தினருடனான தொடர்பை இழந்தார். அவர் 5 நாட்களாக காணமல் போனார்.கடைசியாக இரண்டு நபர்கள் உடன் அவர் காணாமல் போனது குறித்து உத்தரகாண்ட் மாநிலம் ஷிவ்புரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஷிவ்புரி போலீசார் கூறியதாவது:காணாமல் போன ரஸ்மிதா ஹோஜாய், 5 நாட்களுக்கு பின்னர் இங்குள்ள புவுரியில் உள்ள கங்கை கரையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் விசாரணை நடத்தி விரைவில் உரிய குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை