உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீடியோ காலில் அசைன்மெண்ட்... சிறையில் மவுன விரதம்; கதிகலங்க வைக்கும் பிஷ்னோய் மூவ்மெண்ட்

வீடியோ காலில் அசைன்மெண்ட்... சிறையில் மவுன விரதம்; கதிகலங்க வைக்கும் பிஷ்னோய் மூவ்மெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரவுடி கும்பல், லாரன்ஸ் பிஷ்னோய் குறித்து கதிகலங்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மும்பையில் உள்ள நிர்மல் நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் நேற்றிரவு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாபா சித்திக் கொலை சம்பவத்திற்கு, சிறையில் இருக்கும் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பதும், சிறையில் இருந்தபடியே கூலிப்படையாக செயல்பட்டு கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், பிரபல பாடகர் சித்து மூசேவாலா, ராஜஸ்தானின் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் ஆகியோரின் படுகொலைக்கு, லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலே ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் கானை லாரன்ஸ் கும்பல் கொலை செய்ய முயன்ற சம்பவமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாபா சித்திக் கொலை சம்பவம் குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய குற்றப்பிரிவு டி.சி.பி., தட்டா நலவாடே கூறியதாவது: நேற்றிரவு 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக நிர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பிஸ்டல்கள் மற்றும் 28 குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் பாபா சித்திக் இல்லை. இருப்பினும், அவருக்கு 3 பாதுகாவலர்களை மும்பை போலீசார் நியமித்திருந்தனர். சம்பவம் நடக்கும் போது ஒரு பாதுகாவலர் உடன் இருந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பொறுப்பேற்றது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது, எனக் கூறினார். இதனிடையே, சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், பாகிஸ்தானைச் சேர்ந்த ரவுடி ஷகாஷத் பாட்டியிடம் வீடியோ காலில் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ காலில் பேசி தனது கும்பலுக்கு அசைன்மென்ட்டை கொடுத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஷ்னோய், கடந்த 9 நாட்களாக யாருடனும் பேசாமல், அமைதியாக இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு முறையும் இப்படி அமைதியாக இருக்கும் போதெல்லாம், அவனுடைய கும்பல் ஏதேனும் பெரிய குற்றச் செயல்களில் ஈடுபட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டால் மட்டுமே, இதில் தொடர்புடைய நபர்கள் சிக்குவார்கள் என்று நம்பப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Durairaj
அக் 14, 2024 07:47

Fantastic the prisoner communicating with the outside world. How that is possible without cooperation from the prison employee?. Most of the prison staff are corrupt. Let the government reform it or else work out an native


Ganesh Subbarao
அக் 14, 2024 11:32

In the same manner when Pineapple Kesari was served in Chennai Prison


Kasimani Baskaran
அக் 14, 2024 05:50

இது போன்ற மாதிரிகளை வைத்துப்பார்த்தால் தாதாக்களுக்கு சிறை தான் பாதுகாப்பான இடம் போல தெரிகிறது.


S.Ganesan
அக் 13, 2024 21:57

கொலைகாரர்களை , தீவிரவாதிகளை உடனடியாக தண்டிக்காமல் அவர்களை சிறையில் வைத்து உபசாரம் செய்வது நிற்கும் வரை இது போன்ற பாதக செயல்களை தடுக்க முடியாது


Narayanan Sa
அக் 13, 2024 21:43

இவ்வளவு விவரம் தெரிந்தும் இந்த கொலைகாரன் கும்பலை விட்டு வைத்து இருக்கிறார்கள் என்றால் இந்த கொலைகாரர்களுக்கு வெளி நாட்டிலிருந்து கோடி கணக்கில் பணம் வருகிறது. அதை இந்த கொலை காரர்கள் போலீஸ் மற்றும் அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கொடுப்பதால் இவர்கள் யாரும் இந்த கொலை காரர்களை பிடிக்க விடுவதில்லை. அப்படியே பிடித்தாலும் ஒன்று இரண்டு கேஸ் போட்டு தப்பிக்க விட்டு விடுவார்கள். அதனால் இவர்கள் எல்லோரையும் கொன்று குவித்தால் தான் இந்தியா அமைதியாக இருக்கும்


NACHI
அக் 13, 2024 21:40

லாரன்ஸ் பிஷ்னோய் அடுத்த வாரம் கதைய முடித்து விடுவார்கள் ....போலிஸ் Encounter Ready to start ....


ayen
அக் 13, 2024 21:17

பாடகர் சிந்து, சேனா கட்சி தலைவர், கொலைக்கும் இந்த லாரன்ஸ் கும்பல் இடுபட்டுள்ளது என்று சர்வதேச சாதரணமாக செய்தியில் வருகிறது என்றால் இதில் ஏதோ மர்மம் உள்ளது பிரபலங்களை கொலை செய்யும் அவனுடைய பின் பலம் யார் என்று கண்டுபிடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.


வைகுண்டேஸ்வரன்
அக் 13, 2024 20:41

இங்கே பிஜேபி ஆட்சி என்பதால் யாரும் பொங்கவில்லை. இல்லையென்றால், அரசு சரியில்லை. குண்டர்கள் ஆட்சி, ரவுடியிஷம், போதைப்பொருள் என்றெல்லாம் கூப்பாடு போட்டிருப்பார்கள்.


Ganesh Subbarao
அக் 14, 2024 11:37

தமிழ் நாட்டில் நடக்காத சீரழிவா? வேங்கை வயல், கள்ள சாராய மரணங்கள், அரசியல் கொலைகள் இங்கு நடப்பது எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத திராவிட ஆட்சி...து


Ramesh Sargam
அக் 13, 2024 20:01

லாரன்ஸ் பிஷ்னோய் போன்று நாடு முழுவதும் இன்று பல ரவுடிகள் சிறையில் மக்கள் வரிப்பணத்தில் நன்றாக தின்று கொழுத்து அங்கிருந்தே தங்கள் ரவுடி தொழிலை திறம்பட செய்கிறார்கள் சிறை அதிகாரிகளை கையில்போட்டுக்கொண்டு. சிறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். ரவுடிகளை ஓடவிட்டு என்கவுண்டர் செய்து கதையை முடிக்கவேண்டும்.


சம்பா
அக் 13, 2024 19:53

மெத்ததுல அரசுகள் சரியில்லை கடவுள் நாட்டை காப்பாற்றுவாரக


Ramesh Sargam
அக் 13, 2024 19:31

ரவுடிகளை என்கவுண்டர் செய்து கதையை முடிக்கவேண்டும். கைது செய்வது, வழக்கு தொடர்வது இதெல்லாம் வேஸ்ட்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை