உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே 29ல் சர்வதேச விண்வெளி மையம் செல்கிறார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

மே 29ல் சர்வதேச விண்வெளி மையம் செல்கிறார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

வாஷிங்டன்: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா வரும் மே 29ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான் ராக்கெட் மூலம் விண்வெளி செல்கிறார். நாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் இணைந்து, 2025ல், 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.ஆக்ஸியம் மிஷன் 4 திட்டத்தின், பைலட்டாக இந்திய விமானப்படையில் அனுபவம் வாய்ந்த விமானியான சுபன்ஷு சுக்லா பணியாற்றுவார். இவர் வரும் மே 29ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான் ராக்கெட் மூலம் விண்வெளி செல்கிறார். இவர் மே 29ம் தேதி இந்திய நேரப்படி, இரவு 10:33 மணிக்கு ஆக்ஸியம் மிஷன் 4 (ஆக்ஸ்-4) திட்டத்தின் படி, ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் ஏவப்படுவார். யார் இந்த சுபான்ஷு சுக்லா!* உத்தரபிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர் 39 வயதான குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா.* 2006ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார். இவருக்கு 2,000 மணிநேரம் வானில் பறந்த அனுபவம் உள்ளவர்.* சுக்லா இந்திய விமானப்படையின் விமானங்களான Sukhoi-30 MKI, MiG-21S, MiG-29S, Jaguar, Hawks Dorniers மற்றும் N-32 போன்றவற்றை இயக்கி உள்ளார்.* 1984ம் ஆண்டு முதல் விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரராக சுபான்ஷு சுக்லா இருப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Chandran Subramaniam
ஏப் 30, 2025 07:46

வாழ்த்துக்கள்


Chandran Subramaniam
ஏப் 30, 2025 07:44

வாழ்த்துக்கள் அய்யா


Ramesh Sargam
ஏப் 29, 2025 21:51

வாழ்த்துக்கள். சென்றுவா. வென்றுவா. இந்திய நாட்டிற்கு நல்லபெயர் கொண்டுவா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை