வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வானிலை கணிப்பு மையம் என்பதை வானிலை ஜோதிட மையம் என்று பெயர் மாற்றி குறிப்பிடலாம். ஜோசியத்தை நம்பி ஏமாந்தவர்கள் பலர் உண்டு.
புவனேஸ்வர்: அந்தமான் கடற்பகுதியில் உருவான காற்றழுத்தம், தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:மத்திய அந்தமான் கடலில் ஒரு காற்றழுத்த சுழற்சி உருவாகியுள்ளது, இது அக்டோபர் 21ம் தேதி குறைந்த காற்றழுத்தமாக வலுவடையும்.இதனால், வட ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தின் கடலோர பகுதிகளில் அடுத்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு தாக்கம் ஏற்படலாம். அதன் பிறகு, வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து அக்டோபர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.அக்டோபர் 22 முதல் 25 வரை கடலோரப் பகுதியில் கடல் சீற்றத்துடன் இருக்கும். ஒடிசாவின் கடலோரப் பகுதியில் அக்டோபர் 23-25 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே அக்டோபர் 21ம் தேதிக்குள் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும்.இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை கணிப்பு மையம் என்பதை வானிலை ஜோதிட மையம் என்று பெயர் மாற்றி குறிப்பிடலாம். ஜோசியத்தை நம்பி ஏமாந்தவர்கள் பலர் உண்டு.