உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளம்பெண்ணிடம் ரூ.1.7 லட்சம் மோசடி ஆடையை கழற்றச்சொல்லி அட்டூழியம்

இளம்பெண்ணிடம் ரூ.1.7 லட்சம் மோசடி ஆடையை கழற்றச்சொல்லி அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில், 'டிஜிட்டல் கைது' எனக் கூறி, இளம்பெண்ணிடம் 1.7 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள், சோதனை என்ற பெயரில், அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றச் சொல்லி அட்டூழியத்தில் ஈடுபட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இணைய வழி மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், சமீப காலமாக, 'டிஜிட்டல் கைது' எனப்படும் சைபர் குற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அரசு அதிகாரிகள், மத்திய விசாரணை அதிகாரிகள் போல் தங்களை காட்டிக் கொள்ளும் மர்ம நபர்கள், ஆடியோ, வீடியோ அழைப்புகள் வாயிலாக, மக்களை தொடர்பு கொண்டு மிரட்டி, பணம் பறிக்கின்றனர். இந்த கும்பலுக்கு பயந்து, மக்களும் பணத்தை இழந்து வருகின்றனர்.மத்திய விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என, அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், மோசடி கும்பலிடம் தொடர்கதையாக உள்ளது.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்கு, கடந்த 19ல் மொபைல் போனில் புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர், தான் டில்லி போலீஸ் அதிகாரி என்றும், தற்போது சிறையில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில், உங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், விரைவில் கைது செய்யப் போவதாகவும் அந்த பெண்ணை மிரட்டினார்.பயந்து போன அந்த பெண், தனக்கு இதில் தொடர்பு இல்லை எனக் கூறினார். இதன்பின், வீடியோ காலில் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட மோசடி நபர்கள், டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும், யாரிடமும் தெரிவிக்காமல் ஹோட்டலுக்கு சென்று அறை எடுத்து தங்கும்படியும் கூறினர். இதை நம்பி, ஹோட்டலுக்கு சென்று அறை எடுத்து அந்த பெண் தங்கினார். மீண்டும் வீடியோ காலில் அழைத்த மோசடி நபர்கள், அந்த பெண்ணை மிரட்டி, 1,78,000 ரூபாய் பறித்தனர். மேலும், முழு உடல் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, ஆடைகளை கழற்றும்படி, அந்த பெண்ணை மோசடி நபர்கள் மிரட்டினர். பயந்து போன அந்த பெண் ஆடைகளை கழற்றினார். சிறிது நேரத்துக்கு பின், வீடியோ கால் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சில நாட்களுக்கு பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண், இது குறித்து மும்பை போலீசில் புகார் அளித்தார். இதன்படி வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

munichandran narasimhan
டிச 09, 2024 13:10

She did mistake initially rather they couldnt do like this anyhow the culprits should be punishable I hope Indian police and Crim department never failed into this event.


Yasararafath
டிச 02, 2024 09:45

தவறு இல்லை


QCS MCCL
டிச 02, 2024 09:33

இப்படிபட்ட மூடர்கள் இருக்கும்வரை ஏமாற்றத்தான் செய்வார்கள்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 02, 2024 08:23

ஹி.ஹி.ஹி.


Nagarajan D
டிச 02, 2024 07:59

நமது நீதி துறை கடுமையான தண்டனை அதுவும் உடனே அளிக்க வேண்டும்...நம் நீதி துறை எப்படியும் வழக்கு பதிந்த உடன் ஜாமீன் வாரி வழங்கி ஒரு முப்பது வருடம் விசாரணை என்று நடத்தி தண்டத்துக்கு ஒரு கேவலமான தீர்ப்புகள் தருவதால் தான் இப்படி குற்றம் நடக்கிறது.... நீதித்துறை எந்த வழக்கையும் தன வீட்டில் இப்படி ஒரு குற்றம் நடந்தால் எப்படி தீர்ப்பு அதுவும் தன மகளோ மகனோ சகோதரியோ சகோதரனோ தாயோ தந்தையோ பாதிக்கப்பட்டால் என்ன செய்வார்களோ அப்படி செய்ய வேண்டும்... வக்கீல்கள் சம்பாரிக்க வாய்தாக்களும் ஒத்திவைப்புகளும் இருக்கும் வரை குற்றங்கள் பெருகிக்கொண்டே தான் இருக்கும்


ஆரூர் ரங்
டிச 02, 2024 07:40

அதிகமான டிஜிட்டல் பிராடுகளின் கால் சென்டர்கள் மேற்கு வங்கத்திலிருந்துதான் செயல்படுகின்றன என்கிறார்கள். அங்குதான் படித்த வேலைவாய்ப்பில்லாத ஏழ்மையான இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களைப் பயன்படுத்தி மோசடிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலைமைக்கு அங்கு ஆண்ட கம்யூனிஸ்டு திரிணமூல் கட்சிகளே காரணம்.


Priyan Vadanad
டிச 02, 2024 07:39

இதுதான் டெக்னோலஜியின் சாதனை.


ராமகிருஷ்ணன்
டிச 02, 2024 07:11

டிஜிட்டல் அரஸ்ட் செய்து பணம் பறிப்பவர்கள் திமுகவினர்தான் என்று செய்தி வந்துள்ளது. படிக்காதவர்களிடம் அடித்து புடுங்குவது, கொஞ்சம் படித்தவர்களிடம் போனில் மிரட்டி பணம் புடுங்குவது என்று நோகாமல் திமுகவினர் சம்பாதிக்கிறார்கள். போலீஸ்காரங்க உதவியுடன் செய்கிறார்கள்.


Priyan Vadanad
டிச 02, 2024 07:42

அட ராமா, அட கிருஷ்ணா இப்படியுமா கிறுக்கு பிடித்து ஒருசிலர் திரிகிறார்கள் ?


ديفيد رافائيل
டிச 02, 2024 07:10

DND Do not Disturb இத activate பண்ணி வைத்தாலே போதுமே. நான் இத activate பண்ணி பல வருடங்களாச்சு. DND activate பண்ணாத number க்கு தான் இந்த மாதிரியான fraud/scammers call வருது வந்துட்டே இருக்கு. TRAI ல இருந்து இத DND activate பண்ண சொல்லி எவ்வளவு விழிப்புணர்வு கொடுக்குறாங்க, இத அலட்சியப்படுத்துனா இப்படி தான் அசிங்கப்பட்டு நிற்கனும்.


raja
டிச 02, 2024 06:48

அட இப்படி ஏமாத்துறவனுவோ திருட்டு கோவால் புற கொள்ளை கூட்டத்திடம் கைவரிசை காட்டினால் தமிழன் மிகவும் சந்தோஷம் படுவான்..


சமீபத்திய செய்தி