உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசாமில் கொடூரம்: வகுப்பறையில் ஆசிரியரை கொலை செய்த மாணவன்

அசாமில் கொடூரம்: வகுப்பறையில் ஆசிரியரை கொலை செய்த மாணவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கவுகாத்தி: பள்ளிச் சீருடையை அணியாததை கண்டித்த ஆசிரியரை, வகுப்பறையில் மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அசாமில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேதியியல் பாட ஆசிரியராக பருவா பெஜாவாடா(55) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று( ஜூலை 06), 16 வயதான பிளஸ் 1 மாணவனை சரியாக படிக்காததற்கும், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்கும் திட்டி உள்ளார். பெற்றோரை அழைத்து வரும்படி கூறியுள்ளார்.பிறகு மதியம் அந்த மாணவன் பள்ளிச்சீருடை அணியாமல் வகுப்புக்கு சாதாரண உடையில் வந்துள்ளார். இதனை பருவா பெஜாவாடா கண்டித்து, வெளியே செல்லும்படி கூறி உள்ளார். இதனையடுத்து கோபமடைந்த அந்த மாணவன், பையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை தலையில் குத்தினார். அதில் படுகாயமடைந்த ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். கத்தியால் குத்திய மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தமிழ்வேள்
ஜூலை 08, 2024 13:32

திராவிடத்தை அசாமில் பரப்ப இந்த மாணவரை பயன்படுத்திக்கொள்ளலாம் ....அசாமில் ஒரு திமுக மாடல்


திருச்சிற்றம்பலம்
ஜூலை 08, 2024 12:43

இந்தத் தறுரலையை.பிட்டுத் தள்ளுங்க. இவனை காப்பாத்தி, சீர்திருத்தப் பள்ளியில் சேக்குறேன்னு தயவு செய்து சொல்லாதீர்கள். இவன் தீவிர வாதியை விட கேடு கெட்டவன்.


subramanian
ஜூலை 08, 2024 12:41

அதே பள்ளியில், ஆயிரம் அடி தண்டனை. அப்புறம் எல்லோரும் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்.


1968shylaja kumari
ஜூலை 07, 2024 19:50

சரி சரி விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம். ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ததை போல ,தருமபுரி பஸ் எரிப்பு கொலையாளிகளை விடுதலை செய்ததைப்போல இந்த மாணவனை 3 மாதம் சீர்திருத்தப்பள்ளியில் நல்ல உணவு கொடுத்து பிறகு விடுதலை செய்யவும். இவன் மக்களுக்கு ஆற்ற வேண்டிய தொண்டு பல இருக்கிறது


Anantharaman Srinivasan
ஜூலை 07, 2024 19:05

வளர்ப்பு சரியில்லை போல் தெரிகிறது. ஒழுக்கமில்லாத இந்த மாணவன் உருப்படுவதுகஷ்டம். சீர்திருத்த பள்ளியில் சேர்த்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.


vikram
ஜூலை 07, 2024 20:49

என்னது கவுன்சிலிங் கொடுக்கணுமா நடுரோட்டில் வைத்து சுட்டு தள்ளனும்


vijai
ஜூலை 07, 2024 18:20

encouter


கோவிந்தராஜ்
ஜூலை 07, 2024 17:44

விசாரணை வேலைக்கா கது. அவையும் அதே முறையில் செய்வதே சரியான தீர்வு


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை