உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டூழியம்: பெண் பயணியை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி கைது

கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டூழியம்: பெண் பயணியை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற பெண் பயணி, வர்க்கலா அருகே போதை ஆசாமியால் கீழே தள்ளி விடப்பட்டார். கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு தீவிர சிக்கிச்சை அளிக்கப்படுகிறது. போதை ஆசாமி சுரேஷ்குமார், 48, கைது செய்யப்பட்டார்.கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்றிரவு சென்று கொண்டிருந்த பெண் பயணியை வர்க்கலா மற்றும் கடக்கவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே போதை ஆசாமி சுரேஷ்குமார், 48, கீழே தள்ளிவிட்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8dudcdm9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் போதை ஆசாமி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது திருவனந்தபுரம் போலீஸ் ஸ்டேஷனில் போதை ஆசாமி சுரேஷ்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே உடனடியாக வர்க்கலா உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயம் அடைந்து இருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு தீவிர சிக்கிச்சை அளிக்கப்படுகிறது. தலை மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ரயிலை சென்ற பெண்ணை போதை ஆசாமி கீழே தள்ளி விட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

வழக்குப்பதிவு

காயமடைந்த பெண்ணின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரம் ரயில்வே போலீசார், போதை ஆசாமி சுரேஷ்குமார் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 109 இன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

நிக்கோல்தாம்சன்
நவ 03, 2025 20:13

தஷ்வந்த் போன்று விடுதலை ஆகும் சாத்தியம் இருப்பதால் இவனை கூட அதேபோல ட்ரைனில் இருந்து தள்ளி விட்டு பாருங்க


சிட்டுக்குருவி
நவ 03, 2025 20:03

பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் அளவுக்கு மீறி குடித்து இருப்பவர்களை தடைசெய்யவேண்டும் .ரயில்வே போலீஸ் பிரேதலிஸிர் சுவாசம் பரிசோதனை கருவி வைத்துகொள்ளவேண்டும் .சந்தேகப்படும் நபர்களை சோதனைக்குட்படுத்தப்பட்டு அடுத்த ஸ்டேஷனில் கீழே இறக்கிவிடப்படவேண்டும் ..எல்லாமாநிலங்களிலும் சாராயம் சட்டபூஓர்வமாக இருப்பதால் பொதுமக்களை பாதுகாக்க இதுமாதிரி சட்டம் அவசியம் .எல்லா டிராபிக் போலீசும் இந்த கருவியை வைத்திருக்கவேண்டும் .ரயிலின் டிக்கெட்டுக்குகளில் குடித்துவிட்டு பயணம் செய்வது குற்றம் என்று பதிவிடவேண்டும் .


C.SRIRAM
நவ 03, 2025 19:28

உடனடியாக சுட்டு கொன்று வழக்கை முடியுங்கள் .


R S BALA
நவ 03, 2025 18:24

கடவுள் பரிணாமவளர்ச்சியில் மனிதன் என்பவனுக்கு 6 ஆவது அறிவுகொடுத்து இப்படி அவமானப்படுவதைவிட மனித பிறவி கொடுக்காமல் அவர் மிருகமாகவே உலவவிட்டுஇருக்கலாம்..


கடல் நண்டு
நவ 03, 2025 18:09

மது பிரியர் … மாதுவிடம் பிரியப்பட்டிருக்கிறார் ..


K.n. Dhasarathan
நவ 03, 2025 16:18

அந்த போதை ஆசாமிக்கு ஜெயிலில் மூணு வேலை சோறும், மற்றும் மட்டன், கோழி என்று கொடுத்து அரசுக்கு செலவு வைக்காதீர்கள். கால் முட்டியை உடைத்து இனி நேராக நடக்க முடியாதபடி செய்து அனுப்புங்கள், இது ஒரு பாடம், என்றைக்கும் மறக்காது.


duruvasar
நவ 03, 2025 16:10

ஆக மோடி பதவி விலகவேண்டும்


Nandakumar Naidu.
நவ 03, 2025 14:43

அவனையும் அதே போல ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி மரண தண்டனை தர வேண்டும்.


ديفيد رافائيل
நவ 03, 2025 15:43

அத பண்ண மாட்டாங்க. அப்புறம் எதுக்காக பேசிகிட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை