உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாட்டு மாணவர்கள் மீது குஜராத்தில் தாக்குதல்

வெளிநாட்டு மாணவர்கள் மீது குஜராத்தில் தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத் பல்கலை வளாகத்தில், தொழுகை நடத்த முயன்ற இரண்டு வெளிநாட்டு மாணவர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள குஜராத் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்கள் உட்பட ஏராளமானோர் படித்து வருகின்றனர். இவர்கள், பல்கலை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இதில், நம் அண்டை நாடான இலங்கை மற்றும் மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நேற்று முன்தினம் பல்கலை வளாகத்தில் தொழுகை நடத்த முயன்றனர்.அப்போது பல்கலை வளாகத்தில் உள்ள விடுதிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் 25 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து, இங்கு தொழுகை நடத்தக்கூடாது என கூறி, அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு வெளிநாட்டு மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். மாணவர்களின் உடைமைகள், வாகனங்களையும் சேதப்படுத்தினர்.விடுதி நிர்வாகிகள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, தாக்குதல் நடத்தியவர்களில் இதுவரை இரண்டு பேரை போலீசார் கைது செய்துஉள்ளனர். இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த விவகாரம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி குஜராத் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Paraman
மார் 18, 2024 13:11

நடந்தது என்ன வென்றால் சக மாணவர் ஒருவர் அவர்களிடம் ஏன் இவ்வாறு பொது வெளியில் வெளிப்பாடு செய்கிறீர்கள், அருகில் உள்ள தொழுகை செய்யுமிடத்திற்கு சென்று செய்யலாமே என்று கேட்ட பொது "'அப்கானி"என்ற ஆப்கானிஸ்தான் மாணவர் தொழுகை செய்வதை நிறுத்தி விட்டு எழுந்து வந்து கேள்வி கேட்ட மாணவரை கன்னத்தில் அறைந்துள்ளார்....அதன் பிறகும் அடுத்த கன்னத்தை காட்ட இந்திய மாணவர்கள் ஒன்னும் கோழைகள் அல்ல .......வன்முறையை தூண்டும் எவனுக்கும் அவன் வழியிலேயே திருப்பி கொடுத்து புரியவைப்பது தான் இன்றைய இந்தியா .....இந்த மாற்றம் தான் இது நாள் வரை மக்களின் முட்டாள் தனத்தை தங்களுக்கு மூலதனமாக கொண்டு நாட்டை சூறையாடிய இத்தாலி கான்கிரேஸ், 21.ம் பக்க திராவிடியா பயல்கள் போன்ற ஊழல் கும்பல்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது ......இனி இப்பிடித்தான் என்பதை மூர்க்க மதத்தினர் புரிந்து கொண்டு தங்களை அதற்கேற்றவாறு மாற்றிக்கொண்டால் இந்த நாட்டில் அமைதியாக வாழலாம் அல்லது அவர்களின் "பேரமைதி மார்க்கம் " தவழும் பக்கிஸ்தான், பக்கிதேஷ், சிரியா, ஆப்புகானிஸ்தான், வாகபிசம் தழைத்தோங்கும் பாலைவன நாடுகள், இரான், இராக், போன்ற நாடுகளுக்கு சென்று அந்த அமைதியை (?) பரப்பி 72. கன்னிகைகளை பெற்று மோட்சம் பெறலாம்


Sampath Kumar
மார் 18, 2024 12:14

இந்த வெறி பிடித்த மனித விலங்கு இந்த நாட்டின் சாப கேடுகள்


கனோஜ் ஆங்ரே
மார் 18, 2024 10:20

சபாஷ்... இப்படித்தான் இருக்கணும். இந்தியாவின் நெ.1 மாநிலம் குஜராத் மாடல் இதுதான்... இங்கேதான் ஆயிரக்கணக்குல போதைப் பொருள் கடத்தப்படுகிறது... இங்கேதான் அதானி போன்ற கோடீஸ்வரர்கள் உருவாகிறார்கள்... உலகத்தில் உள்ள எத்தனை தீய செயல்கள் அத்தனை உண்டோ... அத்தனையும் நடக்கும் ஒரே மாநிலம் குஜராத்..தான். காந்தி பிறந்த போர்பந்தரில் மது... கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது... இது நல்லவனுங்க பூமி... நல்லவனுங்க மண்... இந்த மாடலைத்தான் தலைல வச்சி தூக்கி ஆடுறானுங்க... இங்கே சுத்துற சங்கிகள்... இந்த கும்பல்ல ஒருத்தன்கூட வரிசையில் நின்னு ஓட்டுப் போட மாட்டானுங்க... ஆனா... இங்க வந்து தேசபக்தி, தேசநலன்...ன்னு புளுகி கூவிகிட்டிருப்பானுங்க...


தாஜ்
மார் 18, 2024 07:34

ரூமுக்குக்குள்ளாற தொழுதிருக்கலாம்.


Farmer
மார் 18, 2024 06:58

what a shame ... even if you dont want them y to pray outside why dont you offer a room and handle this decently? Breaking things and beating ppl is not the way of any Religion guidance...


venugopal s
மார் 18, 2024 04:10

குஜராத்தில் நடப்பது ராம ராஜ்யம் அல்லவா? அப்படித்தான் இருக்கும்!


Shekar
மார் 18, 2024 09:27

ஏன் மத மதத்தினர் இப்படித்தான் பொது இடத்தில செய்யுறாங்கல்லா? கோவிலுக்கு போறான், சிலர் சர்ச்க்கு போறான், அதுபோல அவர்கள் வழிபாட்டு தளத்திற்கு போகலாமே


RAMAKRISHNAN NATESAN
மார் 18, 2024 09:28

தாக்கியது தவறுதான் அதில் மாற்றுக்கருத்து இல்லை .....


Shekar
மார் 18, 2024 09:34

அப்போ ரோட்டை மறிச்சிக்கலாமா


RAMAKRISHNAN NATESAN
மார் 18, 2024 11:02

பொது இடங்களில் வழியை மறித்துதான் மதக்கடமைகளை நிறைவேற்றுவோம் என்று நடந்து கொள்வதும் தவறே .....


Mohamed Younus
மார் 18, 2024 11:51

இங்கே இஸ்லாமியர்களின் தொழுகை பற்றி வருவதால் கூறுகிறேன் .போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்த கூடிய அளவிற்கு தொழுகை நடத்த இஸ்லாத்தில் அனுமதி இல்லை . நடை பாதையில் உட்கார அனுமதி இல்லை . நடை பாதையில் எச்சில் துப்ப கூட அனுமதி இல்லை . கல்லூரி வளாகத்தில் தொழுகை நடத்துவதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அவர்களிடம் சொல்லி இருக்கலாம் . காவல்துறையில் புகார் செய்து இருக்கலாம் . எதுவும் செய்யாதது அவர்களின் தாக்குதல் தொடுப்பது தவறு அல்லவா . தயவு செய்து இது போன்ற செயல்களை மத கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள்.


SANKAR
மார் 18, 2024 01:09

for prayer they should have gone to the nearest mosque. university or college can never be a prayer place ..whatever is the religion of a student.


RAMAKRISHNAN NATESAN
மார் 18, 2024 00:28

அக்கல்வி நிறுவனத்தின் விதிமுறைகள் என்ன சொல்கின்றன?


SOMASKANTHAN R
மார் 18, 2024 11:37

கல்வி நிறுவனத்தின் விதிமுறைகள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவது என்பதை ஒரு உரிமையாகவே தற்போது எடுத்துக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணுகிறோம் என்ற சிந்தனை கூட இல்லாதவர்களை தண்டிக்கத்தான் வேண்டும். போலீஸ் சரியாக நடவடிக்கை எடுத்தாலும் அரசியல்வாதிகள் ஓட்டிற்காக நடவடிக்கை எடுத்தவர்களை பழி வாங்குகிறார்கள். எனவே இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடக்கின்றன. ஆனாலும் தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியதே.


மேலும் செய்திகள்