உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் மோடி - ஜெய்சங்கர் ஆலோசனை

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் மோடி - ஜெய்சங்கர் ஆலோசனை

புதுடில்லி,நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். வங்கதேசத்தில் உள்ள, 'சம்மிலிதா சனாதனி ஜோதே' என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், 'இஸ்கான்' எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி. கடந்த மாதம் 30ம் தேதி ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக கிருஷ்ண தாைஸ சமீபத்தில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். தேச துரோகம் உட்பட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சிட்டங்காங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை போலீசார் அழைத்து வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, போராட்டக்காரர்களை கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்கான் மற்றும் ராமகிருஷ்ண இயக்கம் ஆகியவை மத்திய அரசை வலியுறுத்தியது. பார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடரிலும் இந்த பிரச்னை எதிரொலித்தது.காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய போது, 'வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அந்நாட்டு அரசுக்கு, மத்திய அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் மனிதகுலத்துக்கு எதிரான செயல். இந்த விவகாரத்தில் ஐ.நா., சபையின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது,” என மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்தார். இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடியை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமரிடன் அவர் விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

தடை இல்லை

இஸ்கான் அமைப்பை தடை செய்யக் கோரி வங்கதேச உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நேற்று மீண்டும் விசாரணை நடந்தது.அப்போது, இஸ்கான் அமைப்பு மீது அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.கிருஷ்ணதாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்தபோது நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்தும், இந்த விவகாரத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வங்கதேசத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளை அரசு பாதுகாக்கும் என நம்புவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இஸ்கான் குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் செயல்படும் இஸ்கான் அமைப்பின் தலைவர் சாரு சந்திர தாஸ் பிரம்மசாரி கூறியதாவது:வங்கதேசத்தில் ஹிந்து சமூகத்திற்கு பாதுகாப்பாக இஸ்கான் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதை சீர்குலைக்கும் வகையில் அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இங்கு நிகழும் கட்டாய மதமாற்ற சம்பவங்களை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருவதால், இஸ்கான் அமைப்பு மீது பொய்யான குற்றச்சாட்டுகள் எடுத்துரைக்கப்படுகின்றன. நாங்கள் அமைதியான அமைப்பாக இருப்பதால் தான், எங்கள் அமைப்பை தடை செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.நாங்கள் எப்போதும் மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்து வருகிறோம். எங்கள் போதனைகள் வாயிலாக ஹிந்துக்களை ஒன்றிணைக்கிறோம். எங்கள் உறுப்பினராக இல்லாத ஒருவருக்காக சுமத்தப்படும் வீண்பழிகளை ஏற்றுக் கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

தாக்குதலுக்கு ஹசீனா கண்டனம்

கிருஷ்ணதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது அவாமி லீக் கட்சியின் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வங்கதேச இடைக்கால அரசு, சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டது. சனாதன சமூகத்தின் உயர்மட்ட தலைவர் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். மத சுதந்திரம் மற்றும் அனைத்து சமூக மக்களின் வாழ்க்கை மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை தற்போதைய அரசு உறுதி செய்ய வேண்டும். நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த போராட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் எல்லாத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதுடன் மனித உயிருக்குப் பாதுகாப்பு வழங்கவும் தவறிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Barakat Ali
நவ 29, 2024 11:25

அப்பாடா ..... அங்கே பல மாதங்களாகத் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மோடிக்கு ஹிந்துக்கள் மீது பற்று வந்திருச்சேய் .... சிங்கம் இனி களத்துல இறங்கப்போவுதேய் ....


venugopal s
நவ 29, 2024 10:45

இதே அக்கறையை ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள் விஷயத்திலும் காட்டியிருந்தால் இவர்களை பாராட்டலாம்!


Barakat Ali
நவ 29, 2024 11:31

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கவேண்டும் என்று பாஜக வலியுறுத்துவதோடு அல்லாமல் கண்காணிக்கவும் செய்கிறது ... அது சரி ... போர் நிறுத்தம் ஏற்பட உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லி நாடகமாடிய, தமிழர் விரோத கயவனை நம்பி லட்சக்கணக்கில் தமிழர்கள் உயிரிழந்தனர் .... நினைவிருக்கிறதா ??


கிஜன்
நவ 29, 2024 08:35

இதெல்லாம் அவர்களுக்கு சர்டிபிகேட் கொடுத்து ....அமெரிக்கா நிதியை வாங்கி கொடுத்தீர்கள் அல்லவா.. அப்போ யோசிச்சிருக்கணும் .... உங்களுக்கு சொல்லித்தரவேண்டியதில்லை .... முய்சு ...விஷயத்தில் நேரடியாக பார்த்தோம் ... அவரு அமைதிக்கு நோபல் பரிசெல்லாம் வாங்கியிருக்காரு .... நம்ம ஜீ க்கு ஒரு நோபல் பரிசு கூட இல்ல .... பாத்து பண்ணுங்க ...


Kasimani Baskaran
நவ 29, 2024 06:20

குறிப்பிட்ட சமூகத்தினர் 30% க்கு மேல் இருந்தாலேயே வேறு சமூகத்தினர்களை உண்டு இல்லை என்று ஆக்கி வாழவே விட மாட்டார்கள். அங்கு அவர்கள் பெரும்பான்மை. ஆகவே இந்துக்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை.


SUBBU,
நவ 29, 2024 07:50

PM Modi meets External Affairs Minister Jaishankar. As per reports it was regarding the Hindu genocide happening in Bangladesh. Hoping for some action


இசக்கிமுத்து,தூத்துக்குடி
நவ 29, 2024 06:09

பல பாலஸ்தீனிய முஸ்லிம்கள் அனைத்து யூதர்களையும் கொல்ல விரும்புகிறார்கள். பங்களாதேஷ் இந்துக்கள் வாழ மட்டுமே விரும்புகிறார்கள். பல பாலஸ்தீன முஸ்லிம்கள் இஸ்ரேலை அழிக்க விரும்புகிறார்கள். பங்களாதேஷ் இந்துக்கள் வாழ மட்டுமே விரும்புகிறார்கள். பல பாலஸ்தீன முஸ்லீம்கள் தஞ்சம் புகுந்து பயங்கரவாதிகளுடன் இணைகின்றனர். பங்களாதேஷ் இந்துக்கள் வாழ மட்டுமே விரும்புகிறார்கள். பல பாலஸ்தீனிய முஸ்லிம்கள் காஃபிர் என்று கூறி மாற்று மதத்தினரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து சித்திரவதை செய்கிறார்கள். வங்காளதேச இந்துக்கள் வாழ மட்டுமே விரும்புகிறார்கள். பாலஸ்தீனிய முஸ்லீம்கள் மேற்குலக ஐரோப்பிய நாடுகளின் அனுதாபங்களை பெறுகிறார்கள். அந்த நாடுகளும் முஸ்லீம்களை அகதிகளாக தங்கள் நாடுகளில் அடைக்கலம் கொடுக்கிறது. ஆனால் வங்கதேச இந்துக்களுக்கு எந்த நாடும் அவ்வாறு கருனை காட்டவில்லை. அப்படியென்றால் பங்ளாதேஷில் வாழும் இந்துக்களுக்கு இந்தியாவைத் தவிர வேறு யார் உதவ முடியும்? இந்திய இந்துக்களுக்கும் இதே எச்சரிக்கைதான், கிறிஸ்தவர்களுக்கோ, முஸ்லீம்களுக்கோ ஏதாவது பிரச்சனை என்றால் அவர்களுக்கு குரல் கொடுக்கவும், ஆதரித்து அடைக்கலம் கொடுக்கவும் பல கிறிஸ்தவ, மற்றும் முஸ்லீம் நாடுகள் உள்ளன. ஆனால் இந்துக்களான உங்களுக்கு அவர்களையிட்டு ஏதாவது பிரச்சனை வந்தால் உங்களுக்கு ஆதரவாக எந்த நாடு குரல் கொடுக்கும்? எந்தநாடும் உதவிக்கு வராது! எனவே இந்துக்கள் மற்ற சிறுபான்மையினரைப் போல ஒற்றுமையுடன் இல்லாவிட்டால் இந்த பாரத நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலை ஏற்படுவதற்கு அதிக நாட்கள் ஆகாது.


Nandakumar Naidu.
நவ 29, 2024 05:49

இந்திய அரசாங்கம் பங்களாதேஷிற்கு இந்துக்களின் மீதான வன்முறைக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும். பங்களாதேஷிற்கு சுதந்திரத்தை கொடுத்த நாங்கள் சுதந்திரத்தை எடுக்கவும் தெரியும் என்று எச்சரிக்கை விடுக்க வேண்டும். பங்களாதேஷில் இருக்கும் இந்துக்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுங்கள் மத்திய அரசே.


SUBBU,MADURAI
நவ 29, 2024 05:43

வங்கதேசத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இஸ்கான் கோவிலுக்கு பங்ளாதேஷ முஸ்லீம்கள் தீ வைத்து அந்த கோவிலை கடுமையாக தாக்கி சேதப் படுத்தினர். அதே ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் இஸ்கான் கோவிலின் சேவகர்கள் உணவு வழங்கி பாதிக்கப் பட்டவர்களை தங்கள் கோவிலில் வைத்து பராமரித்து பாதுகாத்தனர். இப்போது நவம்பர் மூன்றாவது வாரத்தில் இஸ்லாமியர்கள் தங்களுக்கு உணவளித்த இஸ்கான் அமைப்பின் சேவகர்கள் மற்றும் அங்குள்ள இந்து பக்தர்களின் மீது கொடூரமாக மரண தாக்குதல் நடத்தினர். கடைசியாக இஸ்கான் கோவிலின் துறவியான சின்மோய் கிருஷ்ணதாஸ் பிரபுவை இடைக்கால அரசின் தலைவராக இருக்கும் முகம்மது யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசாங்கம் கைது செய்து இஸ்கானை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இருக்கிறது. அங்குள்ள முஸ்லீம்கள் தங்களுக்கு உதவி செய்த இந்துக்களிடம் எப்படி நன்றி உணர்வுடன் நடந்து கொண்டுள்ளனர் என்பதற்கு இதுவே சாட்சி.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 29, 2024 20:18

பாம்புக்குப் பால் வார்க்கலாமா ??


நிக்கோல்தாம்சன்
நவ 29, 2024 05:21

இந்தியா வரும் வங்கதேசத்தினரை வீடு கட்டி அடித்தால் வராமல் இருப்பார்களா? இவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது


J.V. Iyer
நவ 29, 2024 04:26

எதற்காக இன்னும் யோசனை? இப்படியே ஒன்றும் செய்யாமல் பாஜக அரசு மெத்தனமாக இருந்தால், ஓட்டுக்களை இவர்கள் இழப்பார்கள். ஹிந்துக்கள் அழிவதை, இவர்கள் எப்படி சும்மா பார்த்துக் கொண்டு இருக்கலாம்? கோழைகள்.