உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் இரு மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் இரு மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.டில்லியில் நிருபர்கள் சந்திப்பில், எல்.முருகன் கூறியதாவது: தமிழகத்தில் தீண்டாமை இருக்கிறது. 22 ஊராட்சிகளில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களால் அவர்களின் பணியை செய்ய முடியவில்லை. வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தி.மு.க., அரசு தவறிவிட்டது.

40 சதவீதம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களில் 40 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோர். ஹாத்ரஸ் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் ஆறுதல் தெரிவித்தார். ஆனால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஏன் நேரில் சந்திக்கவில்லை.

வன்முறை

தமிழகத்தில் தலித் சமூகத்தினருக்கு எதிரான வன்முறையை தடுக்க கோரி, தேசிய பட்டியலின ஆணைய தலைவரை தமிழக பா.ஜ., துணை தலைவர் தலையிலான பிரதிநிதிகள் குழு சந்திக்க உள்ளது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Suresh sridharan
ஜூலை 10, 2024 05:17

அவரவர்கள் பழக்க வழக்கம் தாழ்ந்தவர்களாக மாறிவிடுகிறார்கள்


தாமரை மலர்கிறது
ஜூலை 09, 2024 18:52

திராவிட மாடல் என்பது தாழ்த்தப்பட்டோரை தாக்கும் மாடல் தான்.


Jet Sam
ஜூலை 09, 2024 18:15

மணிப்பூர் எரிந்து கொண்டிருந்த போது, ​​அவர் எங்கே போகிறார்? நமது மத்திய அமைச்சர்.


என்றும் இந்தியன்
ஜூலை 09, 2024 17:37

தாழ்த்தப்பட்டோர் என்றால் சரியான அர்த்தம் திருட்டு திராவிட மடியல் அரசு


ரங்கூன்ராதா
ஜூலை 09, 2024 17:07

ரவுடிகளில் உயர்ந்தசாதி, தாழ்ந்த சாதி கிடையாது. எல்லோரும்.ஒண்ணுதான். வந்துட்டாரு.


பல்லவி
ஜூலை 09, 2024 16:55

அறிக்கை


T.sthivinayagam
ஜூலை 09, 2024 16:53

பாஜகா என்றால் அதிமேதாவிகள் எழுதி கொடுத்ததை அப்படியே சொல்லனுமா் என்று மக்கள் கேட்கின்றனர்


Ms Mahadevan Mahadevan
ஜூலை 09, 2024 16:51

நாடு பூராவும் இப்படித்தான் கொலை கொள்ளை வன்முறை நடக்கிறது. வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்காமல் இருக்க தனி மனித ஒழுக்கம் பொறுமை வேண்டும் . அரம் செய்ய விரும்பு சொள்ளிக்கொடுக்காமல் ஏ பார் ஆப்பிள் தந்த வினை


Yes
ஜூலை 09, 2024 16:10

மனிதர்களில் யாரையும் யாரும் தாழ்த்துவதில்லை. அவரவர்களிடமுள்ள பழக்க வழக்கங்களே அவரவரை தாழ்த்துகின்றன. அதை ஜாதி பேராக வைத்து மற்ற சமுகத்தினரை ஏமாற்றுகிறார்கள்.


Velan
ஜூலை 09, 2024 16:07

சொன்னா மட்டும் பத்தாது நடவடிக்கை எடுக்கனும் அத விட்டுட்டு வெட்டி பேச்சு


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை