உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பக்தர்களுக்கு இடையூறாக திருமணம் விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவு

பக்தர்களுக்கு இடையூறாக திருமணம் விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்துார்: மத்திய பிரதேசத்தின் இந்துார் மாவட்டத்தில் உள்ள ராஜ்பாடா என்ற பகுதியில், 200 ஆண்டுகள் பழமையான, 'கோபால் மந்திர்' என்ற கோவில் உள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்துாரின் பாரம்பரிய தலங்களில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில், சமீபத்தில் மிக பிரமாண்டமாக திருமணம் ஒன்று நடந்தது. இதையொட்டி கோவில் வளாகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், மத சடங்குகளின்படி கோவிலில் திருமணம் நடந்ததாகவும், விருந்தினர்களுக்கு விருந்து வைக்கப்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர். இந்த திருமணத்தால் கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டதோடு, அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாரம்பரியமிக்க இந்த கோவிலில் திருமணத்துக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என, பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இதற்கிடையே, திருமணத்திற்காக, ராஜ்குமார் அகர்வால் என்பவர், கோபால் மந்திர் கோவிலை நிர்வகிக்கும், 'சன்ஸ்தான் ஸ்ரீ கோபால் மந்திர்' அமைப்புக்கு, 25,551 ரூபாய் செலுத்திய ரசீது, சமூக வலைதளத்தில் வெளியானது. இது குறித்தும் விசாரணை நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Tetra
ஜன 14, 2025 19:50

முதலில் தமிழ் நாட்டு கோயில்களுக்கு வாருங்கள். ஒவ்வொரு கோயிலிலும் பக்தர்கள் நுழைய முடியாதபடி 5, 6 கல்யாணங்கள். அந்நிகழ்ச்சிகளில் ஹிந்து மதத்தை தூற்றுபவர்களும் இருப்பார்கள். செம வசூல். வேதனை‌ உண்மையான பக்தர்களுக்கு.


Kasimani Baskaran
ஜன 14, 2025 07:05

ஒருவருக்கும் சிரமமில்லாமல் நடத்தியிருக்கலாம்... சிறிது கொடுத்து பெரிய பலனை அனுபவித்தது ரொம்பவே ஓவர்.


அப்பாவி
ஜன 14, 2025 05:14

உண்டில ரூவா, ரெண்டு ரூவா போடற பக்தர்கள் எதுக்கு? இப்பிடி ஒரு கல்யாணம்னா லம்ப்பா வாங்கிறலாமே கோபாலா.


வாய்மையே வெல்லும்
ஜன 14, 2025 06:40

ஈவேரா ஆசாமிகளுக்கு திருமணபத்தில் நம்பிக்கை இல்ல ஆனா தேவையே இல்லாம இன்னொருவரின் மத விஷயங்களில் மூக்கை நுழைப்பார்கள் . சமூக நீதிப்பேசும் சமூக விரோதிகள்


J.V. Iyer
ஜன 14, 2025 05:10

அங்கு எப்படி அல்லோலூயா பாபு போனார்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை