உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது: 10 நாட்கள் இடைவெளியில் அரங்கேறிய மூன்றாவது சம்பவம்

தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது: 10 நாட்கள் இடைவெளியில் அரங்கேறிய மூன்றாவது சம்பவம்

மூணாறு: மூணாறில் தமிழக சுற்றுலாப் பயணிகள் மீது மது போதையில் தாக்குதல் நடத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அரவிந்தராஜ். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் நேற்று மதியம் நகரில் ஜி.எச்., ரோட்டில் சென்ற போது எதிரில் வந்த ஆட்டோ, காரில் உரசியது. அதுகுறித்து அரவிந்த்ராஜ் கேட்டபோது, மது போதையில் இருந்த ஆட்டோ டிரைவர் அரவிந்த்ராஜையும், குடும்பத்தினரையும் தாக்கினார். சுற்றுலாப் பயணிகள் அளித்த தகவலின்படி மூணாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆட்டோ டிரைவரை பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மூணாறு அருகே மாட்டுபட்டி எஸ்டேட் கொரண்டிக்காடு டிவிஷனைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேந்திரன் 29, அடிமாலியில் வசிப்பதாக தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் பின்னர் ஜாமினில் விடுவித்தனர். அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மூணாறுக்கு அக்.30ல் சுற்றுலா வந்த மும்பை சுற்றுலாப் பயணி ஜான்வியிடம் உள்ளூர் டாக்சி டிரைவர்கள் மோசமான முறையில் நடந்து கொண்டனர். மூன்று டாக்சி டிரைவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் மூணாறு அருகே லெட்சுமி எஸ்டேட் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் நவ.5ல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை மிரட்டியதுடன், ஓட்டல் ஊழியரை தாக்கிய சம்பவத்தில், லெட்சுமி எஸ்டேட்டைச் சேர்ந்த ஜீப் டிரைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட்டது. இந்நிலையில் தற்போது 10 நாட்கள் இடை வெளியில் மூன்றாவது சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை