உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்குறுதி குறித்து விழிப்புணர்வு அமைச்சர் சந்தோஷ் லாட் தகவல்

வாக்குறுதி குறித்து விழிப்புணர்வு அமைச்சர் சந்தோஷ் லாட் தகவல்

பல்லாரி: ''கர்நாடக அரசு செயல்படுத்தி வரும் ஐந்து வாக்குறுதி திட்டங்கள், எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது. மக்களை சந்தித்து கர்நாடக அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகள் குறித்து தெளிவுபடுத்தும் பணியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபட்டு உள்ளனர்,'' என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்தார்.பல்லாரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற, கர்நாடக அரசின் கருவூலத்தில் இருந்து 58,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இதை மாநிலம் முழுதும் செயல்படுத்தியதில் எங்கள் அரசு வெற்றி பெற்றுள்ளது.முதல்வர் சித்தராமையாவின் வழிகாட்டுதலின்படி, அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மக்களை சந்தித்து கர்நாடக அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகள் குறித்து தெளிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.கர்நாடகாவில் கடும் வறட்சி வாட்டி வதைத்து உள்ள நிலையில், 26 லட்சம் விவசாயிகளின் கணக்கில், 2,000 ரூபாயை, மாநில அரசு ஏற்கனவே வழங்கி உள்ளது. மீதமுள்ள 3 முதல் 4 லட்சம் விவசாயிகளின் கணக்கில், வறட்சி நிவாரண தொகை வரவு வைக்கப்படும். இதற்காக மத்திய அரசிடம் இருந்து வறட்சி நிவாரண தொகையை எதிர்பார்த்துள்ளோம்.பல்லாரியில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்ட ஏற்கவே மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மத்திய அரசிடம் அனுமதி கிடைத்த உடன், மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி