உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நிகழ்ச்சி நிரல்

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நிகழ்ச்சி நிரல்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடக்க உள்ளது; இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இன்று நடக்க உள்ள நிகழ்ச்சி நிரல்:

* மதியம் 12.05 மணிக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா துவங்குகிறது* ⁠கும்பாபிஷேகம் மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் நடக்க உள்ளது* ⁠இதில் 12.29 நிமிடம், 8 வினாடி முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் தான் மிக நல்ல நேரம்; * ⁠இந்த நேரத்தில் குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரதிஷ்டை சடங்குகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது* ⁠இந்த நேரம் தான் மிகவும் முக்கியமானதாகும்; இந்த நேரத்தில் தான் பிரதமர் மோடியும் கோவிலில் சடங்குகள் செய்ய உள்ளார்* ⁠விழாவில் மொத்தம், 3 ஆயிரம் வி.வி.ஐ.பி.,க்கள் உள்பட, 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள உள்ளனர் * ⁠10 ஆயிரத்துக்கும் அதிகமான சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்* ⁠அயோத்தி ராமர் கோவில் சராயு நதிக்கரையில் அமைந்துள்ளது* ⁠இதனால் விபத்துக்கள், அசம்பாவிதங்களை தடுக்க நீச்சல் வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Seshan Thirumaliruncholai
ஜன 22, 2024 10:29

பிரதிஷ்டை செய்திடும் பொது பார்ப்பது உடலில் நமக்கு ஏற்படும் உணர்வு வேறு. ஆகம விதிகளின்படி வேத மந்திரம் ஜபித்தபிறகு திருமேனியை வணங்குவது நம்முடைய நல்ல பிராத்தனை நிறைவேறிட. முதலில் கல்லால் ஆன மேனி. பிறகுதான் திருமேனி. குழந்தை ராமரை பார்ப்பதைவிட பட்டாபிஷேக ராமனை வணங்கவேண்டும்.


B RAJU
ஜன 22, 2024 10:13

ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம்....


PalaniSamy Kumar
ஜன 22, 2024 08:38

ஜெய் ஶ்ரீராம் நல்ல செய்தி


NALAM VIRUMBI
ஜன 22, 2024 08:33

அற்புதம். இராம ராஜ்யம் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நிறுவப் படுகிறது. ஜெய் ஶ்ரீ ராம்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 22, 2024 08:32

எல். கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வக்கீல் கே. பராசரன் அனைவரும் அயோத்யா வந்துள்ளனர்.


GMM
ஜன 22, 2024 08:04

வாழ்வில் சில இனிமையான நாள் வேண்டும். அயோத்தியில் கும்பாவிசேகம் ஒரு இனிமையான நாள்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 22, 2024 07:56

இன்று நடப்பது கும்பாபிஷேகம் அல்ல. ஆலயத்தின் முக்கிய சிலையை நிறுவிய பின் நடத்தப்படும் பிராண பிரதிஷ்டை என்ற வைபவம். அதாவது கல்லில் செதுக்கிய விக்ரஹத்திற்கு உயிரூட்டும் நிகழ்வு. இனி அது கல்லால் ஆன சிலை அல்ல. அந்த விக்ரஹத்தை இனி ஶ்ரீ ராமராக, தெய்வமாக, நம்மில் ஒருவராக நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நாள். கிட்டத்தட்ட நம்வீட்டில் ஒரு குழந்தை பிறந்துள்ளது போன்ற மகிழ்ச்சியான நிகழ்வு.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 22, 2024 07:50

எல்லோருக்கும் வாழ்கையில் சிறப்பான சில நேரங்கள், பெரும் பேறு பெற்ற தருணங்கள் வாய்ப்பதில்லை. நம் எல்லோருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி தரும், வரலாற்று சிறப்பு மிக்க தருணம், இன்றைய தினம், சோபகிருது வருடம், தை மாதம், 8 வது நாள், த்வாதசி, திங்கட்கிழமை, (ஜனவரி 22, 2024) மதியம் 12:29 முதல் 12:30 வரை, ஒரே ஒரு நிமிடம் வாய்த்திருக்கிறது. அந்த நிமிடத்தை, இறை உணர்வுடன் மகிழ்ச்சியாக, நேரலையில் கண்டு மகிழ்வோம். இன்று உயிர்வாழும் அனைவரும் பாக்கியம் பெற்றவர்கள்.


g.s,rajan
ஜன 22, 2024 07:10

L.K.Advani....


குமரி குருவி
ஜன 22, 2024 06:58

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள்பற்றிய தினமலர் செய்திகள்அனைத்தும்அர்த்தமுள்ளவை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை