உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைத்து மாநிலங்களில் இருந்தும் அயோத்திக்கு 500 ரயில்கள்

அனைத்து மாநிலங்களில் இருந்தும் அயோத்திக்கு 500 ரயில்கள்

அயோத்தி; அனைத்து மாநிலங்களில் இருந்தும் அயோத்திக்கு, 500 ரயில்களின் சேவையை துவங்க, ரயில்வே திட்டமிட்டுஉள்ளது. இதற்கான வழித்தடங்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம், வரும், 22ம் தேதி நடக்க உள்ளது. அதன்பின், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வந்து செல்ல வசதியாக, ரயில் போக்குவரத்து இணைப்பு வசதியை மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டு உள்ளது. சிறிய நிலையமாக இருந்த அயோத்தி தாம் ரயில் நிலையம், முதற்கட்டமாக, 240 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மூன்று மாடிகள் உடைய இந்த புதிய ரயில் நிலையத்தையும், ஆறு, 'வந்தே பாரத்' ரயில்களின் சேவையையும், குறைந்த கட்டணத்தில் பயணிக்க இரண்டு, 'அம்ரித் பாரத்' ரயில்களின் சேவையையும், பிரதமர் மோடி, கடந்த, 30ம் தேதி துவங்கி வைத்தார். இந்த புதிய ரயில் நிலையத்தில், 12 'லிப்ட்'கள், 14 'எஸ்கலேட்டர்'கள், உணவகங்கள், உடைகள் மாற்றும் அறைகள், குழந்தைகளுக்கான கவனிப்பு அறைகள், காத்திருப்பு அறைகள் என, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுஉள்ளன.

சொகுசு பயணம்

'அம்ரித் பாரத்' ரயில்கள், சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை. 'வந்தே பாரத்' ரயிலுக்கு இணையான வேகமும் பாதுகாப்பும் உடையது.இந்த ரயிலின் இருபுறமும் இன்ஜின் கொண்டு இயக்கப்படுவதால், 'வந்தே பாரத்'துக்கு இணையாக, மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் செல்லும்.ஒரே நேரத்தில், 1,834 பேர் பயணிக்கும் வகையில், 12 முன்பதிவு பெட்டிகள் உட்பட, 22 எல்.எச்.பி., பெட்டிகள் இருக்கும். தற்போது, தர்பங்கா -- அயோத்தி தாம் -- ஆனந்த் விகார்; மால்டா -- பெங்களூரு இடையே, 'அம்ரித் பாரத்' ரயில் இயக்கப்படுகிறது. மொபைல் போன், தண்ணீர் பாட்டில் வைக்க பிரத்யேக ஸ்டாண்ட், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக கழிப்பறை, கண்காணிப்பு கேமரா, பயணியர் தகவல் தொடர்பு அமைப்பு, புதுமையான வெளிப்புற தோற்றம், நவீன ஓட்டுனர் அறை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதிர்வின்றி, சொகுசாகவும் விரைவாகவும் பயணம் செய்ய முடிகிறது என, பயணியர் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

தினசரி சேவை

ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் ரயில் நிலையத்தில், அடுத்தகட்டமாக, விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல, புதிய விமான நிலையமும் இங்கு திறக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, பல்வேறு முக்கிய நகரங்களுக்கு விமான சேவை துவக்கப்பட உள்ளது. இருப்பினும், அதிகஅளவில் மக்கள் செல்ல, ரயில் போக்குவரத்து இருக்கிறது. தற்போதுள்ள நிலவரப்படி, அயோத்தி தாம் ரயில் நிலையத்தில், ஒரு நாளைக்கு, 100 ரயில் சர்வீஸ்களை இயக்க முடியும்.எனவே, நாடு முழுதும் இருக்கும், 16 ரயில்வே மண்டலங்கள் சார்பில், அனைத்து மாநிலங்களில் இருந்தும் அயோத்தியை இணைக்கும் வகையில், 500க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். இதில், 200க்கும் மேற்பட்ட ரயில்கள், தினசரி சேவையாக இருக்கும். மாநிலங்களில் உள்ள முக்கிய கோவில் நகரங்கள், மாநகரங்களில் இருந்து, இந்த ரயில்கள் இயக்கப்படும். இதற்கான வழித்தடங்களை தேர்வு செய்ய, ரயில்வே அதிகாரிகள், மண்டலங்கள் வாரியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். தெற்கு ரயில்வே சார்பில், சென்னை, நாகர்கோவில், மதுரை, கோவை மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து அயோத்திக்கு, ஆறு விரைவு ரயில்களின் சேவையை துவங்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

'ஆன்மிக சுற்றுலா தலைமையிடம்!'

அயோத்தி மக்கள் கூறியதாவது: அயோத்தி நகரம், பெரிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன், ஒரு சதுர அடி நிலம் 500 ரூபாய் வரை இருந்தது. தற்போது, 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது, ரயில் நிலைய மேம்பாடு, விமான நிலையம் திறப்பு, சாலைகள் விரிவாக்கம் போன்ற பல்வேறு திட்டப் பணிகள், பல ஆயிரம் கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதனால், அயோத்தி இந்தியாவின் ஆன்மிக சுற்றுலா தலைமையிடமாக மாறும் என, நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Kasimani Baskaran
ஜன 04, 2024 05:28

போலி இந்துக்களின் பதிவைப்பார்த்து அவர்கள் எந்த அளவுக்கு திராவிடமயமாகியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதுகளுக்கு நல்ல புத்தியைக்கொடுக்க அந்த இராமனிடம் பிரார்த்திக்கிறேன்.


kijan
ஜன 04, 2024 04:59

அயோத்தி தாங்குமா ..... ஒரு ரயிலுக்கு 22 கோச்சுகள் .... ஒரு கோச்சில் சுமார் 78 பேர் பயணம் செய்யலாம் ....அப்போ 500 ரயிலுக்கு சுமார் 8,58,000 பேர் ஒரு நாளைக்கு வருவாங்க .... இது தவிர ரெகுலர் ரயில், கார் பஸ் ன்னு கூட்டம் சேரும் .... அங்கு போதுமான குளியல் ...கழிப்பிடங்கள் இருக்கிறதா ?


Vijay D Ratnam
ஜன 03, 2024 23:15

காசிக்கு போனால் ராமேஸ்வரத்துக்கு போவோணும்னு சொல்வாய்ங்க. அதுபோல அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றபின் தமிழகத்தின் வேதாரண்யம் ஊரில் இருக்கும் திருமறைக்காடர் கோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்வார்கள். என்னது யாரும் சொல்லவில்லையா, சரி இனிமே சொல்லி பழகுங்க, பழகிவிடும். சுந்தரர், அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 125ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் திருமறைக்காடர் தாயார் வேதநாயகி ஆவர். இத்தலத்தின் தல விருட்சங்கள் வன்னிமரம் மற்றும் புன்னைமரமாகும். வேததீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் ஆகியவை இத்தலத்தில் உள்ளன. வேதாரண்யம் பகுதியும் வளரட்டும்.


sankaran
ஜன 03, 2024 22:48

அயோத்தி இன்னொரு மெக்கா மதினா மாதிரி ஆகி விடும்..உலகேங்கும் இருந்து பக்தர்கள் வருவார்கள்...அயோத்தியில் பணம் கொட்டோ கொட்டோ என்று கொட்ட போகிறது...


Seshan Thirumaliruncholai
ஜன 03, 2024 20:34

தமிழக ஹிந்து மக்களின் வாக்கு பி ஜெ பி க்கு செல்லாமல் இருக்க அயோத்திக்கு திருவிழாவிற்கு தி மு க அரசு மறைமுக ஆதரவு தெரிவிக்கும்.


Duruvesan
ஜன 03, 2024 20:17

பாஸ் கட்டுமர கம்பெனி டிக்கெட் எடுக்காம வருவானுங்க


DARMHAR/ D.M.Reddy
ஜன 06, 2024 02:03

துருவேசன் அவர்களே டிக்கெட் எடுக்காமல் மட்டுமல்ல கையில் மஞ்சள் பையுடன் கழுத்தில் மஞ்சள் துண்டுடன் திருட்டு ரயில் ஏறி வருவார்கள்.


Bye Pass
ஜன 03, 2024 19:51

பொங்கலுக்கு வேஷ்டி புடவை ,முழு கரும்பு , இது தான் நம்ம ரேஞ்சு …


sahayadhas
ஜன 03, 2024 19:18

GSt என்ற பெயரில் வடநாட்டிற்கு செல்லும் தென்னிந்திய பணம்.


N SASIKUMAR YADHAV
ஜன 06, 2024 09:12

உங்கள் திறமையை பாராட்டி அண்ணா தமிழகம் கட்டிய வரியைவிட அதிகமான நிதியை கொடுத்திருக்கிறது மோடிஜி தலைமையிலான மத்தியரசு. அந்த நிதியை கோபாலபுர கஜானாவுக்கு திருப்பினால் உங்களுக்கு எப்படி தமிழக மக்களுக்கு இலவசமாக எது கொடுத்தாலும் மனதிருப்தியடைந்து திராவிட கட்சிகளுக்கே வாக்களித்து விடுவார்கள்


g.s,rajan
ஜன 03, 2024 17:27

Many of the People in India have No Job,No Money ,No Food,No Shelter ....


Pammal Raaja
ஜன 03, 2024 19:27

But DMK ministers loot public money and we don�t bother


g.s,rajan
ஜன 03, 2024 17:24

More Publicity .....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை