உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: லோக்சபாவில் விவாதம்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: லோக்சபாவில் விவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அயோத்தி ராமர் கோயில் மற்றும் கும்பாபிஷேகம் குறித்து லோக்சபாவில் விவாதம் நடந்தது.அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.,22 கோலாகலமாக நடந்தது. இந்நிலையில், ராமர் கோயில் மற்றும் கும்பாபிஷேகம் குறித்து லோக்சபாவில் விவாதம் நடந்தது.இந்த விவாதத்தின் மீது பா.ஜ., எம்.பி., சத்யபால் சிங் பேசுகையில், இந்த விவாதத்தில் பங்கேற்று பேசுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்த்தது மற்றும் கடவுள் ராமரை தரிசனம் செய்தது வரலாற்று சிறப்பு மிக்க தருணம். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, பார்லிமென்ட் வளாகத்தில் இந்த விவாதம் தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறுகையில், ‛‛ராமர் கோயில் தான் எங்களுக்கு நம்பிக்கையின் மையம் ஆக இருந்தது. எப்போதும் இருக்கும். ஆனால், சிலர் ராமர் வருவார் என்று பாஜ., கூறுகிறதே. ஆனால் தேதியை சொல்லவில்லை என கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு பதிலாக தேதியை அறிவித்து ராமர் கோயிலை கட்டினோம்''. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ