உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 128 வயதான யோகா குரு காலமானார்; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

128 வயதான யோகா குரு காலமானார்; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பத்மஸ்ரீ விருது பெற்ற 128 வயதான யோகா குரு பாபா சிவானந்த் காலமானார். அவருக்கு பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல யோகா குரு பாபா சிவானந்த். இவருக்கு வயது 128. இவர் நேற்றிரவு வாரணாசியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் உயிரிழந்தார். ஹரிச்சந்திர காட்டில் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது.பாபா சிவானந்த் ஆகஸ்ட் 8ம் தேதி, 1896ம் ஆண்டு வங்கதேசத்தின் சில்ஹெட் மாவட்டத்தில் பிறந்தார். இவருக்கு ஆறு வயது இருக்கும் போதே, அவரது பெற்றோர் உயிரிழந்தனர். ஆசிரமத்தில் சேர்ந்த இவர் ஆன்மிக வாதியாக மாறினார். யோகா பயிற்சி அளித்து வந்தார். கடந்த 2024ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தையொட்டி, மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இவர் யோகா செய்து அசத்தினார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இவர் குறித்து அனைத்து செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டு இருந்தது.

தலைவர்கள் இரங்கல்

இவரது மறைவுக்கு, பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:யோகா பயிற்சியாளரும் காசியில் வசிப்பவருமான சிவானந்த் பாபாஜியின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. யோகா மற்றும் தியானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை, நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். யோகா மூலம் சமூகத்திற்கு சேவை செய்ததற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. இவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் அவருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.யோகி ஆதித்யநாத் இரங்கல்''யோகா துறையில் ஈடு இணையற்ற பங்களிப்பைச் செய்த காசியின் புகழ்பெற்ற யோகா குரு சிவானந்த்ஜியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது'' என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Subramanian
மே 05, 2025 07:21

ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


VSMani
மே 04, 2025 17:07

128 வயது. கடவுள் அனுக்கிரகம்


பா மாதவன்
மே 04, 2025 14:33

யோகா மூலம் சமூகத்திற்கு நிறைய சேவைகள் செய்து, அதற்காக பத்மஸ்ரீ விருது பெற்று நம் நாட்டிற்கு புகழ் சேர்த்த மூத்த யோகா குரு சிவானந்த்ஜியின் மறைவு இந்த பாரத நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது சுத்தமான ஆன்மா சாந்தியடையவும், யோகாவின் அருமை பெருமைகள் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் சென்று சேர உதவிடவும் எல்லாம் வல்ல இறைவன் அனுக்ரஹம் புரியட்டும்.


Sambath
மே 04, 2025 14:29

இந்த அற்புத மனிதர் ஏன் உலகின் மிக அதிக வயதுடைய நபர் என்று அறியப்பட வில்லை?? இந்தியாவின் பழமையான சனாதன யோக வாழ்க்கை முறையின் தனிச்சிறப்புகளை இவரின் வாழ்க்கை வரலாறு மூலம் உலகிற்கு சொல்ல வேண்டும்


karupanasamy
மே 04, 2025 14:23

கழிசடைகள் பிறப்பதற்கு முன்னரே பிறந்து நல்வழியில் வாழ்ந்து காட்டிய மகான் வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்.


R K Raman
மே 04, 2025 14:13

ஓம் ஷாந்தி


RAMAKRISHNAN NATESAN
மே 04, 2025 13:54

பத்மஸ்ரீ விருது பெற்ற 128 வயதான யோகா குரு பாபா சிவானந்த் .......... நடிகர் அஜித் பெற்றுள்ள பத்ம விபூஷன் விருது வாங்க யோகா குருவுக்குத் தகுதி இல்லீங்களா சாமியோவ் ?


mohanamurugan
மே 04, 2025 13:52

128 வயதான யோகா குரூப் கண்ணீர் அஞ்சலி


Matt P
மே 04, 2025 13:32

இவருக்கு உண்மையிலேயே 128 வயதாகிறதென்றால் உலகத்திலேயே அதிக நாள் வாழ்ந்த மனிதர்- யோகஆ குரு மறைந்தார் என்று இருக்க வேண்டும். கூகிளில் போய் பார்த்தஆல் உலகத்திலேயே அதிக நாள் வாழ்ந்து கொண்டிருப்பவர் இங்கிலான்தை சேர்ந்தவர் 115 வயது என்று இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை