உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊக்க மருந்து புகார்: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை!

ஊக்க மருந்து புகார்: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில், இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு தடை விதித்தது.இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. அவருக்கு வயது 30. இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் கடந்த மார்ச் 10ம் தேதி தேசிய அணிக்கான தேர்வு சோதனையின் போது சிறுநீர் மாதிரியை வழங்க மறுப்பு தெரிவித்தார். இதனால் இவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து பஜ்ரங் புனியா மேல்முறையீடு செய்தார்.'நான் வேண்டும் என்று சிறுநீர் மாதிரியை வழங்க மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர்களது செயல்முறைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதனால் மறுப்பு தெரிவித்தேன்' என பஜ்ரங் புனியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு தடை விதித்தது. இந்த காலகட்டத்தில் பஜ்ரங் புனியா போட்டிகளில் பங்கேற்கவோ, மல்யுத்த பயிற்சி அளிக்கவோ கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் பஜ்ரங் புனியாவும் ஒருவர்.இவர், ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ஆரூர் ரங்
நவ 27, 2024 16:22

முறைகேட்டில் என்னிக்காவது மாட்டிகிடுவோம்ன்னு முன்னமே தெரிஞ்சு முன் ஜாக்கிரதையாக பிரிஜ் மீது அபாண்டமான குற்றச்சாட்டு? பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்.


Barakat Ali
நவ 27, 2024 15:04

தீயவர்களின் சாயம் வெளுக்கிறது ...........


visu
நவ 27, 2024 12:05

அவங்க நடத்துற போட்டியில கலந்துபீங்க ஆனா அவங்களை நம்பமாடீங்க ?


S.Martin Manoj
நவ 27, 2024 11:07

எதிர்த்து கேள்வி கேட்டு போராடினார் என்பதற்காக பழி வாங்கபடுகிரார்.


Shekar
நவ 27, 2024 11:22

அதென்ன திமிங்கலம் ஒங்க ஆளுங்களுக்கு பல் வழி வந்தாலும் மத்திய அரசுதானா?


Kumar Kumzi
நவ 27, 2024 12:02

நாட்டுப்பற்று எப்படி இருக்கும்


Anand
நவ 27, 2024 12:31

புத்தி இப்படித்தான் யோசிக்கும்.


S.Martin Manoj
நவ 27, 2024 12:37

இல்ல திமிங்கலம் மத்திய அரசுக்கு தடவி கொடுக்கும் எல்லோருக்கும் மத்திய அரசு சொர்கம் ஆன தவறை சுட்டிக்காட்டும் எல்லோரும் தேச விரோதிகள் அப்புறம் சிபிஐ ,இடி,விளையாட்டு வீரர்கள் என்றால் இதுமாதிரி பழிவாங்கல் இதுமாதிரி நிறைய இருக்கு திமிங்கலம், ஊழல் வாதிகள் நிறையபேர் உங்க கட்சில சேர்ந்தா உடனே பலிச்சினு வெள்ளையா மாரிருறாங்களே கொஞ்சம் யோசிங்க திமிங்கலம்.


S.Martin Manoj
நவ 27, 2024 12:39

குமார் உங்களுக்கு இருப்பது நாற்றுபற்று இல்லை மத வெறி


சீனு
நவ 27, 2024 10:50

எல்லா திருட்டு பசங்களோட புகலிடமும் இண்டி கூட்டணி


Anand
நவ 27, 2024 10:33

//அவர்களது செயல்முறைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை// அவர்கள் தான் உன்னை இந்த அளவுக்கு உயர காரணமானவர்கள், இப்போது எவனோட பேச்சையையோ கேட்டுக்கொண்டு நாட்டிற்கே துரோகம் செய்யும் அளவுக்கு துணிந்துவிட்டாய், நீ விதைத்ததை நீயே அறுவடை செய்துக்கொண்டிருக்கிறாய்....


சுலைமான்
நவ 27, 2024 10:23

நீ உத்தமன்னா குடுத்துட்டு பேசனும். அத விட்டுட்டு அவங்க சரியில்லை, இவங்க சரியில்லை..... என்ன தயா இதெல்லாம்?


Kumar Kumzi
நவ 27, 2024 10:00

இவன் தேசத்துரோக கொங்கிரஸின் கைக்கூலி வாழ்நாள் தடை விதித்திருக்க வேண்டும்


Oru Indiyan
நவ 27, 2024 09:01

காங்கிரஸ் என்றாலே பொய் பித்தலாட்டம் தான் போல.


SUBBU,MADURAI
நவ 27, 2024 08:50

இந்த ஒழுக்க சீலரான உத்தம புருஷன்தான் கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒலிம்பிக்ல நடந்த போட்டியில் ஃபிராடு பண்ணி தகுதி நீக்கம் பண்ணி விரட்டி அடிக்கப் பட்ட மல்யுத்த வீராங்கனை ஆதரவாக வீராவேசமாக குரல் எழுப்பியவர். அதற்கு முன்பு இவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலால் அநீதியை தட்டிக்கேட்பதாக சொல்லி பாஜக அரசுக்கு எதிராக டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர்கள். அப்படிப் பட்டவர்கள்தான் இப்போது ஊக்க மருந்து உட்கொண்டு போட்டிகளில் விளையாட தடைசெய்யப் பட்டு அசிங்கப்பட்டு அவமானப்பட்டு கடைசியில் முச்சந்தியில் நிற்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை