உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாட்டு இறைச்சிக்கு தடை!

மாட்டு இறைச்சிக்கு தடை!

அசாமின் சமகுரி தொகுதியை பா.ஜ., கைப்பற்றியுள்ளது. அதை ஏற்க முடியாத காங்., முஸ்லிம் பகுதிகளில் மாட்டிறைச்சி வினியோகித்து வெற்றி பெற்றதாக கூறியுள்ளது. இவ்வளவு காலம் நீங்கள் அப்படி தான் வென்றீர்களா? மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும்படி கோரிக்கை வைத்தால், அதற்கு நான் தயார். ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,

போராட்டம் தொடரும்!

நம் நாடு எந்தெந்த அமைப்புகளால் உருவாக்கப்பட்டதோ, அந்த அமைப்புகளை அழிக்க சிலர் தங்கள் சக்திக்கு இயன்ற அனைத்தையும் செய்து பார்க்கின்றனர். அவர்களுக்கு எதிராகவும், நாட்டின் ஆன்மாவுக்காகவும் நாங்கள் போராடுகிறோம். பிரியங்கா, லோக்சபா எம்.பி., - காங்.,

மஹாராஷ்டிராவுக்கு இழிவு!

மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. ஆனால், மஹாயுதி கூட்டணியினர் இன்னும் முதல்வர் யார் என்று முடிவு செய்யவில்லை; ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. இது மஹாராஷ்டிராவையும், அவர்களின் அன்புக்குரிய தேர்தல் கமிஷனையும் அவமானப்படுத்தும் செயல். ஆதித்ய தாக்கரே, எம்.எல்.ஏ., சிவசேனா உத்தவ் அணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை