உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பு வங்கதேசத்துக்கு உள்ளது: ஜெய்சங்கர்

சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பு வங்கதேசத்துக்கு உள்ளது: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பு, அந்நாட்டின் இடைக்கால அரசுக்கு உள்ளது என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு உள்ளது. அக். 30ல் ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில் வங்கதேச தேசியக் கொடியை அவமதித்ததாக, 'சம்மிலிதா சனாதனி ஜோதே' என்ற ஹிந்து அமைப்பின் தலைவரும், 'இஸ்கான்' எனப்படும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியுமான சின்மோய் கிருஷ்ண தாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரை விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், வழக்கறிஞர் கொல்லப்பட்டார். வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்தபடி உள்ளது.இந்த விவகாரம் குறித்து, பார்லி.,யில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ''வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களை இந்தியா தீவிரமாக கவனித்து வருகிறது. வங்கதேசத்தின் அனைத்து குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான முதன்மைப்பொறுப்பு, அந்நாட்டின் இடைக்கால அரசிடம் உள்ளது.''டாக்காவில் உள்ள இந்திய துாதரகம், ஹிந்துக்களின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறது. கைது செய்யப்பட்ட ஹிந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் தொடர்பான வழக்கு விசாரணை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும்,'' என்றார்.இதற்கிடையே, தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சின்மோய் கிருஷ்ண தாஸ் உட்பட, 17 பேரின் வங்கிக் கணக்குகளை 30 நாட்களுக்கு முடக்க, வங்கதேச நிதி நுண்ணறிவு பிரிவு நேற்று உத்தரவிட்டது. சிறுபான்மையினர் விவகாரத்தில் இந்தியா இரட்டை வேடம் போடுவதாக வங்கதேச சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் குற்றம் சாட்டியுள்ளார்.இந்நிலையில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இரு நாட்களுக்கு நாடு தழுவிய போராட்டத்தை விஷ்வ ஹிந்துபரிஷத் அமைப்புஅறிவித்துள்ளது.

எல்லை பிரச்னைக்கு தீர்வு

பார்லிமென்டில் நேற்று, இந்தியா - சீனா எல்லை பிரச்னை தொடர்பான கேள்விக்கு, பதில் அளித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் சமீபத்தில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபரை சந்தித்துப் பேசினார். அப்போது, எல்லை பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முறையாக கையாள வேண்டும் என்றும், அமைதியான சூழலுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்பட்டு விடக் கூடாதுஎன்றும், சீன அதிபரிடம், பிரதமர் சுட்டிக் காட்டினார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 01, 2024 12:57

அசாமில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி 5 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதில், கடந்த 5 தேர்தல்களில் காங்கிரஸ் ஜெயித்துவந்த சமாகுரி தொகுதியும் அடக்கம். சமாகுரி தொகுதியில் கடந்த 5 முறை எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் ரகிபுல் ஹுசைன் இந்த முறை துப்ரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 10.12 லட்சம் வாக்குகளுடன் வெற்றிபெற்றார். இந்தத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் எம்பி ரகிபுல் ஹுசைனின் மகனும், காங்கிரஸ் வேட்பாளருமான தன்சிலை பாஜகவின் திப்லு ரஞ்சன் சர்மா தோற்கடித்தார். இந்த நிலையில், அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாஜகவினர் மாட்டிறைச்சி வழங்கி ஜெயித்ததாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.


James Mani
டிச 01, 2024 20:14

சரி சரி இப்ப என்ன சொல்லவர்றீங்க ?


சாண்டில்யன்
நவ 30, 2024 13:59

• Bangladesh targets Iskcon after monks arrest • Freezes 17 bank accounts linked to Iskcon for 30 days • Order comes a day after court refused to தடை செய்ய the Hindu organisation Bangladesh authorities have ordered the freezing of bank accounts of 17 people associated with the Hindu spiritual organisation Iskcon, including the recently arrested monk Chinmoy Krishna Das. The bank accounts have been frozen for 30 days on the orders of the Bangladesh Financial Intelligence Unit BFIU, and directives have been issued to various banks, news agency PTI reported. The move came after a Bangladesh High Court rejected a plea to the International Society for Krishna Consciousness, popularly known as Iskcon. The call to தடை செய்ய the organisation was raised after a violent pro broke out following the arrest of the Hindu monk, who was accused of killing an advocate. - India Today


ஆரூர் ரங்
நவ 30, 2024 10:50

ஒரு எதிர்கட்சி கூட இந்த அராஜகத்தை கண்டிக்கவில்லை. கூட்டணியே முஸ்லிம் லீக்கின் பெரியஅவதாரம். INDI கூட்டணியே பாகிஸ்தான் ஆதரவுடன்தான் உருவாகியுள்ளதோ?


சாண்டில்யன்
நவ 30, 2024 13:45

உச்ச நீதி மன்றம்தான் புல்டோசர் பாபாவைக் கண்டித்துள்ளது. மேலும் அந்த மாநில காவல் துறை தலைவருக்கு அவர் வாழ்நாளில் மறக்க முடியாத தீர்ப்பு வழங்கப் படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வில்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 01, 2024 12:33

சிறுபான்மையினரைப் பாதுகாக்கவேண்டும் என்று இந்தியா கோரினால் போலிப்பெயரில் உலவும் ...களுக்கு கோபம் வந்துவிடுகிறது ..... உணர்ச்சியமாக ஆகிவிடுகிறார்கள் ....


karthik
நவ 30, 2024 08:44

பாரதத்தில் இருக்கும் சிறுபான்மையினரை நாங்கள் தான் காத்துவருகிறோம் உலகத்தில் எங்கு அவர்களுக்கு ஆபத்து என்றாலும் குரல் கொடுப்போம் என்று முழங்கும் ஓட்டு திண்ணிகள் காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் போன்ற கயவர்கள் இதுவரைக்கும் நவதுவாரங்களை திறக்கவில்லை. இப்போதாவது இங்குள்ள இந்து மக்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால் பாரதம் முஸ்லீம் படையெடுப்பு காலத்தில் அனுபவித்த துன்பங்கள் மீண்டும் நடக்கும்.


Muralidharan raghavan
நவ 30, 2024 11:54

முற்றிலும் உண்மை. இந்துக்களே உங்கள் மதத்தை மொழியை கலாச்சாரத்தை மறக்காதீர்கள் உங்கள் சந்ததியினருக்கும் பின்பற்ற அறிவுறுத்துங்கள்


Vignesh
டிச 01, 2024 06:39

உத்திரபிரதேசத்தில் நான்கு பேர் போலீசார் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள் அவர்களும் நம் தேசத்தின் சிறுபான்மையினரே, ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக கட்டி இருக்கிற மசூதியை இடிக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வளவு காழ்ப்புணர்ச்சி நிறைந்தது, மதம் மனிதனை மிருகமாக்கும், இந்த வார்த்தை எல்லாருக்குமே பொருந்தும்,


ஆரூர் ரங்
நவ 30, 2024 08:43

இதுக்குதான் அம்பேத்கார் முழுமையான பிரிவினையை அமல்படுத்தக் கோரினார். அது நடக்காததால் இங்கு சிறுபான்மை மக்கள் தொகை பன்மடங்கு கூடியிருக்கிறது. அங்கோ சிறுபான்மையினர் இன அழிப்பு நடக்கிறது. மாற்று மதங்களை சாத்தான் என்று அழைப்பவர்கள் மதசார்பற்றநாட்டில் வாழத் தகுதியற்றவர்கள். இனிமேலும் இங்கு மதசார்பின்மை பேசுவதில் நியாயமேயில்லை .


Sampath Kumar
நவ 30, 2024 08:19

உங்களுக்கும் இருக்கு அப்பு படிக்கிறது பாடம் இடிக்கிறது மசூதி


சாண்டில்யன்
நவ 30, 2024 06:49

ஊருக்குதாண்டி உபதேசம் உனக்கல முற்பகல் விதைப்பின் பிற்பகல் விளையும் பட்டால்தான் தெரியும் பாப்பானுக்கு என்ற பழமொழிகள் தமிழ் போல வேறு மொழிகளில் இல்லை போலிருக்கிறது அதனால் விளைந்த வினைதான் இது


Thiyagarajan S
நவ 30, 2024 07:07

எருமை மாடு அங்கு இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இங்கு நாங்கள் அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்வோம் உங்களுக்கு பிரச்சனை என்ற நீங்கள் அனைவரும் அங்கு ஓடிவிடுவீர்களா....


ஆரூர் ரங்
நவ 30, 2024 08:46

ஆமாம். பாகிஸ்தானைப் பிரித்தாலும் இன்னொரு ஹிந்து விரோத இஸ்லாமிய அடிப்படைவாத நாடுதான் உருவாகும் என்பதை அறியாமல் வங்க தேசத்துக்காக உயிர் கொடுத்த ஹிந்து ராணுவ வீரர்கள் அப்பாவிகள். அந்தப் போருக்கு ஆன செலவை அவர்களிடமிருந்து வட்டியுடன் பிடுங்க வேண்டும்.


venugopal s
நவ 30, 2024 06:23

ஊருக்குத் தான் உபதேசம், எனக்கு இல்லை என்பது போல் உள்ளதே!


சாமிநாதன்,மன்னார்குடி
நவ 30, 2024 07:47

ஏன்யா இப்படி காலங் காத்தால விடியலை திட்டுற?


Kasimani Baskaran
நவ 30, 2024 06:19

இந்துக்கள் அங்கு பத்திரமாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே இந்திய இராணுவத்தை அனுப்பி சுதந்திரம் கொடுத்த பொழுது எந்த விகிதாச்சாரத்தில் இந்துக்கள் இருந்தார்களோ அந்த விகிதாச்சாரத்தில் நிலப்பரப்பை பிரித்து இந்துக்களுக்கு தனி நாடாக கொடுத்து விடலாம்.


கிஜன்
நவ 30, 2024 06:17

சரி சார் ... கைகுலுக்கும் மொட்டை யாரு ?


சமீபத்திய செய்தி