உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாற்றுத்துணி கூட இல்லை: உடுத்திய துணியுடன் வெறும் கையுடன் வந்திறங்கிய ஹசீனா

மாற்றுத்துணி கூட இல்லை: உடுத்திய துணியுடன் வெறும் கையுடன் வந்திறங்கிய ஹசீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வன்முறை கும்பலிடம் இருந்து உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தில், மாற்றுத்துணி கூட இல்லாமல், உடுத்திய துணியோடு இந்தியா வந்துள்ளார் ஷேக் ஹசீனா. அவருக்கு இந்திய அரசு சார்பில் தகுந்த உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டத்தால் கடும் வன்முறை வெடித்து ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. வேறு வழியில்லாத நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3375r4kz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் நாட்டை விட்டு வெளியேற, 45 நிமிடங்கள் மட்டுமே ராணுவ தளபதி அவகாசம் கொடுத்திருந்தார். அந்த நேரத்தை பயன்படுத்திய அவர், தனது சகோதரி ஷேக் ரெஹானா மற்றும் நெருங்கிய உதவியாளர்களுடன் ஒரு ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு வந்து இறங்கினார்.

ஹசீனாவுக்கு நேர்ந்த நெருக்கடி!

எந்த நேரத்திலும் வன்முறை கும்பல் தன் இல்லத்தில் புகுந்து விடும் ஆபத்தில் இருந்து தப்பிக்க, அவசரமாக, நாட்டை விட்டு ஓடி வந்த ஹசீனா, உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தில், துணிமணிகள், அன்றாட தேவைக்கான பொருட்கள் என எதையும் எடுக்காமல், உடுத்திய துணியோடு இந்தியா வந்தார்.காஸியாபாத் ஹின்டன் விமான தளத்தில் வந்திறங்கிய அவருக்கும், அவரது குடும்பத்தினர், உதவியாளர்களுக்கும் மாற்றுத்துணி கூட இல்லை. அவற்றை வாங்கித் தர இந்திய அதிகாரிகள் தான் உதவியுள்ளனர். பிரதமர் பதவியில் இருந்த, ஷேக் ஹசீனாவுக்கு, இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது தொடர்பாக, அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது.

அடைக்கலம்

ஷேக் ஹசீனா வேறு ஏதேனும் நாட்டில் அடைக்கலம் பெறும் வரை இந்தியா அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

venugopal s
ஆக 08, 2024 15:49

மதம் மக்களுக்கு அபின் என்பதை மற்றொரு முறை நிரூபித்து விட்டார்கள்!


Sivagiri
ஆக 08, 2024 14:06

உலகில் 50 க்கும் மேற்பட்ட முஸ்லீம் நாடுகள் உள்ளன, எந்த முஸ்லீம் நாட்டிலும் ஒரு முஸ்லீம் தலைவருக்கு, அடைக்கலம் கிடையாதா. சிக்கலை தீர்க்க உதவ யாரும் இல்லையா ? . .


அப்பாவி
ஆக 08, 2024 12:54

பேங்க் அக்கவுண்ட்டில் நிறைய இருக்கும்.


Ramesh Sargam
ஆக 08, 2024 12:03

இப்படி மனிதாபிமான அடைப்படையில் அடைக்கலம் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இப்பொழுது தேவையான உதவியை பெற்றுக்கொண்டு, பிறகு அவர்கள் நாட்டில் எல்லாம் சுமுகமாக ஆனபிறகு, மீண்டும் அங்கு சென்று ஆட்சியில் அமர்ந்தால் நாம் செய்த உதவியை நினைத்து, அங்குள்ள நம் இந்தியர்களுக்கு உதவுவாரா...? இந்தியாவுக்கு உதவுவாரா...? சந்தேகம்தான்...


hariharan
ஆக 08, 2024 12:02

where is Mr.owaisi as an elected MP he only talks on his relegion.


anbu
ஆக 08, 2024 11:16

நம் நாட்டிற்குள் தங்க அனுமதி கொடுத்தது தவறு


Rasheel
ஆக 08, 2024 11:13

இது மதம் சார்ந்த தீவிரவாத பிரச்சனை. சுதந்திற்காக போராடி, அந்த நாட்டை காப்பாற்றிய நாட்டின் தலைவரின் - ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலையில் அசிங்கம் செய்யும் ஒரு நாகாரீகமில்லாத கூட்டம். என்ன அசிங்கம்.


ram
ஆக 08, 2024 10:54

எங்கேயோ எதோ ஒரு சிறுபான்மையினருக்கு அது முஸ்லீம் இல்ல கிறிஸ்டினாக இருந்தால் இங்கு இருக்கும் திருட்டு திராவிட ஆட்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டு கவர்னர் மாளிகைக்கு ஊர்வலம் போவார்கள், ஆனால் இப்போது கொத்து கொத்தாக ஹிந்து மக்களை கொல்லும் பொது நவ துவாரங்களையும் மூடி கொள்வார்கள். இதுதான் இவர்கள் மதசார்பின்மை வெட்கக்கேடான ஒன்று. ஆனால் இங்கு இருக்கும் அரசுகள் பெருபான்மை மக்களின் வரி பணத்தை சிறுபான்மை ஆட்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து அவர்களை சந்தோஷமாக வைத்து கொள்கிறது வோட்டு பிச்சைக்காக. அவர்கள் வளர வளர ஒரு நாள் bangaledesh மாதிரி பாரதமும் ஆகும் நாள் விரைவில்.


நிக்கோல்தாம்சன்
ஆக 08, 2024 10:46

இந்த நிலைமை கார்பொரேட் குடும்பத்தினருக்கும் வந்தேறிகளால் ஏற்பட வேண்டும்


Nandakumar Naidu.
ஆக 08, 2024 10:46

போராட்டக்காரர்கள் நன்றிகெட்ட ஓநாய்கள் கூட்டம். வன்முறையை ஊக்குவிக்கும் நாடுகள், அரசியல் தலைவர்கள் எல்லாம் அதே வன்முறையால் தான் மண்ணோடு மண்ணாக அழிந்து போவார்கள். இது நிச்சயம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை