உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோசடி கணக்குகளை முடக்க அதிகாரம் வேண்டும் வங்கிகள் கோரிக்கை

மோசடி கணக்குகளை முடக்க அதிகாரம் வேண்டும் வங்கிகள் கோரிக்கை

புதுடில்லி:சைபர் மோசடிகளை கட்டுப்படுத்த, சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்குகளில், வங்கி கணக்குகளை முடக்க வங்கிகளுக்கு உரிய அதிகாரம் அளிப்பது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்க வேண்டும் என இந்திய வங்கிகள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. 'மியூல்' கணக்கு என்பது பண மோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட நிதி சம்பந்தப்பட்ட குற்றங்களை எளிதாக்க பயன்படுத்தப்படும் வங்கி கணக்கு ஆகும். குற்றவாளிகள் இந்த கணக்கை பயன்படுத்தி சட்டவிரோத பணத்தை, வங்கிகள் வாயிலாக பரிமாற்றம் செய்கின்றனர். இதனால் அமலாக்கத்துறை சட்டவிரோத நிதி பரிமாற்றம் உள்ளிட்ட செயல்களை கண்காணிப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. பண மோசடி தடுப்பு சட்டத்தின் படி, நீதிமன்றம் அல்லது சட்ட அமலாக்கத்துறையின் முறையான அனுமதியின்றி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை முடக்கவோ அல்லது தடுக்கவோ வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை. ஆகையால், மியூல் கணக்குகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் சைபர் மோசடிகளை தடுக்க, அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெறுவதில் நேரத்தை வீணடிக்காமல், சட்டவிரோத பரிவர்த்தனைகளில் ஈடுபடும் கணக்குகளை முடக்க வங்கிகளுக்கு அதிகாரமளிப்பது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்க வேண்டும் என இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி