உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரா புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்

ரா புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்

புதுடில்லி: 'ரா' உளவு அமைப்பின் புதிய தலைவராக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி பராக் ஜெயினை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. வெளிநாடுகளுக்கான இந்தியாவின் உளவு அமைப்பாக, 'ரா' எனப்படும், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு செயல்பட்டு வருகிறது. நம் நாட்டுக்கு எதிரான வெளிநாடுகளின் சதித்திட்டம், அவர்களின் செயல்பாடு, வெளிநாடுகளில் வசிக்கும் நபர்கள் குறித்த தகவல்களை, இந்த பிரிவு நம் நாட்டுக்கு அளித்து வருகிறது. இதன் தலைவராக உள்ள ரவி சின்ஹாவின் பதவிக்காலம், நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ரா உளவு அமைப்பின் தலைவராக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1ல் பதவியேற்கும் அவர், இரண்டு ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார்.

யார் இவர்?

பஞ்சாப் கேடரைச் சேர்ந்த 1989 பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரியான பராக் ஜெயின், உளவுத்துறை மற்றும் வெளிநாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டவர். உளவுத்துறையில் இவரை, 'நன்கு துப்பறிபவர்' என அழைப்பர். பாகிஸ்தானுக்கு எதிரான 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு மூளையாகச் செயல்பட்டவரும் இவரே. இவர் அளித்த துல்லிய தகவல்களின் அடிப்படையிலேயே, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் படைகள் அழித்தன. மேலும் இவர், ஜம்மு - காஷ்மீரில் அதிக காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இதுதவிர, பஞ்சாப் டி.ஜி.பி., உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் பராக் ஜெயின் வகித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜூன் 29, 2025 07:46

உளவு அமைப்பில் இருந்த ராஜிவ் ஜெயின் என்பவரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக நியமித்ததில் அவர் லஞ்சம் பெற்றுக் கொண்டு என்னை ஒரு குற்றவாளி எனக் கூறி அந்த ஆணையம் எனக்கு ஒன்றும் செய்ய இயலாது என லஞ்சம் கொடுத்தவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப உத்தரவு பிறப்பித்தார். ஆவண சாட்சியங்கள் உயர் நீதி மன்றத்தில் எதிரிகள் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் ஆகியவற்றில் நான் பொது விநியோக திட்டத்தில் மொத்த விற்பனை பண்டக சாலையினர் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்து மக்களுக்கு எடை குறைத்து வழங்கி கொள்ளையால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டிக் கொள்ள வேண்டும் என லஞ்ச ஊழல் மிக்க அதிகார வர்கத்தின் சட்ட விரோத கட்டாயப்படுத்தலை எதித்ததால் பனி நீக்கம் செய்யப்பட்டதாக இருந்தும் பொய்யுரைத்து உத்தரவு பிறப்பித்தார். அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள குற்றவாளிகள் பாதுகாப்பு அளிக்கின்றனர். அது குறித்து உள்துறை அமைச்சருக்கு இ மெயில் அனுப்பியும் பயனில்லை.


சமீபத்திய செய்தி