வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அருமை
புதுடில்லி: “பார்லிமென்ட் நடவடிக்கைகளை, இனி, 22 மொழிகளில் கேட்கலாம்,” என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். லோக்சபா நேற்று காலை கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது: ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, ஒடியா உள்ளிட்ட 18 மொழிகளில், சபை நடவடிக்கைகள் மொழி பெயர்க்கப்படுகின்றன. தற்போது, காஷ்மீரி, கொங்கனி, சந்தாலி ஆகிய மொழிகள் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும், பார்லி., நடவடிக்கைகளை எம்.பி.,க்கள் இனி கேட்கலாம். உலகிலேயே ஒரே நேரத்தில், 22 மொழிகளில் சபை நடவடிக்கைகள் கிடைக்கும் ஒ ரே பார்லிமென்ட் நம்முடையது தான். இவ்வாறு அவர் பேசினார். நம் நாட்டின் பன்முகத்தன்மையை பார்லி., பிரதிபலிக்கிறது. வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.,க்கள், விவாதங்களின் போது தாய்மொழிகளில் பேசுகின்றனர். இதனால், மொழி தெரியாத எம்.பி.,க்கள் அவதிப்பட்டனர். தற்போது, அனைத்து மொழிகளிலும் சபை நடவடிக்கைகள் மொழி பெயர்க்கப்படுவதால், எம்.பி.,க்கள் பயனடைவர்.
அருமை