உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய எம்.பி.,க்களை வரவேற்க தயாராகும் பார்லி., வளாகம்

புதிய எம்.பி.,க்களை வரவேற்க தயாராகும் பார்லி., வளாகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் மறுசீரமைப்பு பணிகள் முடிவடையாததால், புதிய எம்.பி.க்களுக்கு பார்லிமென்ட் இணைப்பு கட்டடத்தில் வரவேற்பு அளிக்க லோக்சபா செயலகம் முடிவு செய்துள்ளது.நாடு முழுதும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. இதில் பதிவாகும் ஓட்டுகள், அடுத்த மாதம் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், தேர்வாகும் எம்.பி.க்களை வரவேற்கும் வகையில் பார்லிமென்ட் வளாகங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கிடையே, புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் ஒரு பகுதியில், மறுசீரமைப்புப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. எனினும், புதிய எம்.பி.,க்கள் வருகைக்கு முன் இப்பணிகள் முடிவடையாது என கூறப்படுகிறது.இதன் காரணமாக, அவர்களை வரவேற்கும் வகையில் பார்லிமென்ட் இணைப்பு கட்டடத்தில் ஏற்பாடுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளன.முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தின் மாலை முதல் புதிய எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகம் நோக்கி படையெடுக்க துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lion Drsekar
மே 18, 2024 15:03

இவர்களுக்கு ராஜ யோகம், எல்லாமே இலவசம் , எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம், பயணிக்கலாம் , முக்கிய பிரமுகரானால் வாக்களித்தவர்கள் மற்றும் மக்கள் யாருமே அவர் செல்லும் பாதையில் நடமாட முடியாது , இவர்கள் வாகனத்துக்கு முன்னால் பல நூறு பாதுகாப்பு வாகனங்கள், பின்னால் அதைவிட அதிக அளவில் வாகன அணிவகுப்பு தனி விமானம் , திரும்பும் எல்லாம் மூன்றெழுத்து படித்தவர்கள் சேவகம் செய்ய தயாராக இருப்பார்கள் பிறகு என்ன வேண்டும் முதல் கூட்டத்திலேயே இவர்களுக்கு சம்பள உயர்வு , படி உயர்வு , ஓய்வூதியம் உயர்வு என்று உயர்திக்கொள்வார்கள் இந்த செலவுக்கு மக்களிடம் வேறு என்ன வழிகளில் எல்லாம் வரி போடலாம் என்று யோசிப்பார்கள் ? இது நடை முறை இதைத்தான் நாம் சுதந்திரம் பெற்றது முதல் கண்டு வருகிறோம் வளர்ந்தது கட்சிகள் , மிகப்பெரிய வளர்ச்சியில் வளர்ந்தவர்கள் கட்சிக்காரர்கள் , கவனிடப்பவர்கள் தொழில் நிறுவனங்கள் இயங்கும் தவறினால் அடிசறுக்கும் வளர்ச்சி , நாட்டுவளர்ச்சி எதுவுமே இல்லையா என்றால் இருக்கிறது நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் மழை போன்று சில நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி கடல் அலைகள் போல் அடுக்கடுக்காய் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய நிலைகளில் இருப்பவர்கள் வவ்வாலைப்போல் செய்வது அறியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் மக்கள் பிரநிதிகளை வரவேற்கும் புதிய கட்டிடம் , உள்ளே வருபவர்களையும் புதிதாக மாற்றும் நிலைக்கு கல்வி, பொதுஅறிவு , மனித நேயத்தையும் கற்றுக்கொடுப்பது மிகவும் நல்லது செங்கோல் வைக்க சாமியார் வந்தது போல், நல்வழியில் இவர்களை இட்டுச்செல்ல சான்றோர்கள் மற்றும் நேர்மையானவர்களை அவ்வப்போது அழைத்து வகுப்பு எடுக்கவேண்டிய நிலையை உருவாக்கினால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்


M Ramachandran
மே 18, 2024 00:09

இதில் எத்தனை தேச விரோத சக்திகளின் ரெப்ரெஷ்ண்ட் செய்ய போகிறார்களோ


Syed ghouse basha
மே 17, 2024 20:54

இந்திய பராளுமன்றத்துக்கு ஒரு அழகு இருந்தது ஒரு கம்பீரம் இருந்தது ஒரு பாரம்பரியம் இருந்தது இதுஎன்ன புதிய பாராளுமன்ற கட்டிடம் சினிமா தியேட்டர் மாதிரி பொழிவிழந்து காணப்படுகிறது


மேலும் செய்திகள்





புதிய வீடியோ