உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

தமிழகத்தில் பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: தமிழகத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என தமிழகத்தின் முன்னாள் கவனர் பன்வாரிலால் புரோஹித் கூறி உள்ளார்.தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரையில் நான்கு ஆண்டுகள் வரையில்தமிழகத்தின் கவர்னராக இருந்தவர் பன்வாரிலால் புரோஹித் .தொடர்ந்து பஞ்சாப் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் சொந்த காரணங்களுக்காக தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். முன்னதாக சண்டிகர் நகரில் வாழும் தமிழர்கள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:.நான்கு வருடங்கள் நான் தமிழ்நாட்டில் இருந்தேன், நிறைய மகிழ்ந்தேன், அங்கு மிகுந்த கலாச்சாரம், பாசமுள்ள மனிதர்கள், எளிமையான மக்கள். தலைநகர் புது டில்லியாக இருந்த போதிலும் தற்போது குளிர் வாட்டி வதைக்கிறது.இந்நிலையில் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் தமிழ்நாட்டில் நடக்கட்டும். கோடை காலத்தில் தலைநகர் டில்லியில் நடக்கட்டும் என்றார்இது குறித்து சண்டிகரில் உள்ள டெவலப்மென்ட் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஸ்டிடியூட் (ஐடிசி) இயக்குனர் பிரமோத் குமார் கூறி இருப்பதாவது:பாராளுமன்றக் கூட்டத்தை நடத்தும் நடவடிக்கை தென் மாநில மக்களுக்கு நிச்சயமாக நிம்மதியாக இருக்கும், அங்கு ஒரு கூட்டத்தொடர் மற்றும் ஒருவித செயலகத்தை அமைத்தால், மக்கள் பயனடைவார்கள். தென் மாநிலங்களில் உள்ள அரசியலில் மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன, மேலும் இந்த நடவடிக்கை மாநில அரசியலை தேசிய அரசியலில் ஒருங்கிணைக்கும் திட்டமாக இருக்கலாம். சமூக, அரசியல் மற்றும் நிர்வாக மட்டங்களில் இது ஒரு நல்ல ஒருங்கிணைப்பு நடவடிக்கையாகும். இது மக்களைச் சென்றடைவதற்கான முயற்சியாகும்” என்று அவர் மேலும் கூறினார்.மேலும் பஞ்சாபில் பணியாற்றி வரும்தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜே.எம்.பாலமுருகன் கூறுகையில், தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய காலத்தில் தமிழ்நாட்டின் அற்புதமான வளர்ச்சிக்கு சமூக நீதியும், உறுதியான நடவடிக்கையின் அடிப்படையிலான சமூகத் துறை மேம்பாடும் அடித்தளமாக உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
பிப் 05, 2024 12:05

ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்த மதிப்புக்குரிய பன்வாரிலால் அவர்களை கல்லூரி ஆசிரியையுடன் இணைத்து பொய்ப் பிரச்சாரம் செய்தது திமுக. புகார் பொய்யென நிரூபிக்கும் ஆதாரங்கள் வெளிவந்தும் அவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரை தமிழகத்திற்கு MP தேர்தல் தேவையில்லை.


SUBBU,MADURAI
பிப் 05, 2024 08:48

அதிமுக ஆட்சியில் இந்த பன்வாரிலால்தான் தமிழக கவர்னராக பதவியில் இருந்தார் அப்போது ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் இவரிடம் கேள்வி கேட்ட இளம் பெண் நிருபரை தன் பேத்தியாக நினைத்து செல்லமாக லேசாக கன்னத்தில் தட்டினார் இதை ஒரு பெரிய பிரச்சனையாக்கி முதியவரான மென்மையான இளகிய மனம் கொண்ட இந்த மனிதரை அப்போது திமுகவினரும் RSB மீடியாக்களும் சேர்ந்து கொண்டு அரசியல் பண்ணுவதற்காக அவர் வயதை கூட பாக்காமல் character assasination பண்ணினார்கள் ஆனால் இதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் பெருந்தன்மையுடன் கடந்து போய் விட்டார். இவர் பதவி வகித்த போது கவர்னர் மாளிகையின் ஒரு மாதச் செலவு பல லட்சமாக இருந்து அந்த செலவை பல மடங்கு குறைத்த பெருமை இந்த பன்வாரிலால் அவர்களுக்கு உண்டு. மேலும் அவர் தமிழகத்திற்கு (பரம்பரையாகவே இவர் செல்வந்த குடும்பத்தை சேர்தவர்) கொரோனா நிதியாக தன் சொந்தப் பணம் 1 கோடியை நிவாரன நிதியாக கொடுத்தார் இவ்வளவு தூரம் மக்களுக்கு நல்லது செய்த இந்த மனிதரை தமிழக அரசியல்வாதிகள் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல அந்த பாவத்துக்கெல்லாம் தண்டைனையாகத்தான் இப்போது ஆன்.என்.ரவி என்கிற முரட்டுக் காளை தமிழக கவர்னராக வந்து இவர்களை வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார் Karma is a boomerang, What goes around comes around!


Ramesh Sargam
பிப் 05, 2024 00:12

நல்ல யோசனைதான். அப்படி செய்தால் பாஜகவுக்கு தமிழ் நாட்டில் ஆதரவு மேலும் பெருகும். மோடி அவர்கள் இந்த யோசனையைப்பற்றி சிந்தித்து ஒரு நல்ல முடிவு எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ