உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பசவனபாகேவாடி வளர்ச்சி ஆணையம்

பசவனபாகேவாடி வளர்ச்சி ஆணையம்

l சமூக, பாலின சமத்துவம், ஜாதி, மதத்தின் பெயரால் ஏற்படும் பாகுபாடுகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கையை ஊட்டி, புரட்சியை ஏற்படுத்தியவர் விஸ்வகுரு பசவண்ணர். அவரின் கொள்கையை மாணவர்களிடையே பரப்ப, அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்l பசவண்ணர் பிறந்த இடமான பசவனபாகேவாடியை வளர்ச்சி அடைய செய்ய, பசவனபாகேவாடி வளர்ச்சி ஆணையம் அமைக்கப்படும்l கர்நாடகா என பெயர் மாற்றப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, ஆண்டு முழுதும் 'கர்நாடகா கொண்டாட்டம் 50' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டு உள்ளதுl கர்நாடகாவின் ஆட்சி மொழி கன்னடம். கடைகள் உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகை, போர்டுகளில் 60 சதவீதம் கன்னடம் கட்டாயம் சட்டம் கடுமையாக பின்பற்றப்படும்l கர்நாடக எல்லை வளர்ச்சி ஆணையம் சார்பில் எல்லையோர மாவட்டங்களில் கலாச்சார நிகழ்ச்சிகள், கன்னட பள்ளிகள் சீரமைக்கப்படும்l கர்நாடகாவின் பிராந்திய மொழிகளான துளு, கொடவா, பைரி, கொங்கணி ஆகியவற்றின் இலக்கியம் மற்றும் கலாசாரம் அந்தந்த கல்விக்கூடங்கள் மூலம் ஊக்குவிக்கப்படும்l அழிவின் விழும்பில் உள்ள தொட்டாடா, சன்னாடா, ஸ்ரீகிருஷ்ண பரிஜதா, டோகலு கொம்பேயடா, கரகா மற்றும் சூட்ரதா ஆகிய நாட்டுப்புற கலைகள் ஊக்குவிக்க பயிற்சி மற்றும் செயல்திறன் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்l நாடோடிகளின் கலை, கலாசாரத்தை பாதுகாக்க, 'நாடோடிகள் கலாசார திருவிழா' நடத்தப்படும்l நாராயணகுரு, ஜோதி பா புலே, ஈ.வெ.ராமசாமி, ராம் மனோகர் லோஹியா, பாபு ஜெகஜீவன் ராம் போன்ற அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் எழுத்து, சமூக மற்றும் அரசியல் சிந்தனைகள் பற்றிய கட்டுரைகள் கன்னடத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, வெளியிடப்படும்l முன்னாள் முதல்வர் பங்காரப்பா நினைவு மண்டபம் கட்டப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை