பெலகாவி விமானம் 27 முதல் ரத்தாகிறது; 13 மாவட்டங்களுக்கு தொடர் மழை எச்சரிக்கை
பெலகாவி: பெலகாவி - பெங்களூரு இடையே, இரண்டு ஆண்டுக்கு முன், இண்டிகோ நிறுவனம் தினசரி விமான போக்குவரத்து துவங்கியது. ஆரம்பத்தில் தினமும் 85 சதவீதம் பேர் பயணித்தனர்.பொது மக்கள், சுற்றுலா பயணியர், தொழிலதிபர்கள் என, பலருக்கும் வர்த்தக மேம்பாட்டுக்கு உதவியாக இருந்தது. காலையில் பெங்களூரு சென்று, தங்கள் வேலையை முடித்து கொண்டு, பெலகாவிக்கு திரும்ப, பலரும் இவ்விமானத்தை நம்பியிருந்தனர்.பெலகாவியில் இருந்து சென்னை, வாரணாசி, புனே, கோல்கட்டாவுக்கு புதிய விமான போக்குவரத்தை துவக்கும்படி, பயணியர் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.குளிர்காலத்தை முன்னிட்டு, விமான போக்குவரத்து அட்டவணையில், இவ்விமான நிறுவனம் மாற்றம் செய்துள்ளது. பெலகாவி - பெங்களூரு விமானத்தில், கடந்த சில மாதங்களாக பயணியர் எண்ணிக்கை குறைந்தது. இதனால், இம்மாதம் 27ம் தேதி முதல் போக்குவரத்தை நிறுத்த, இண்டிகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது; டிக்கெட் முன்பதிவையும் நிறுத்தியுள்ளது.இந்த விமான போக்குவரத்தை தக்க வைத்து கொள்ள, மக்கள் பிரதிநிதிகள் முயற்சிக்கின்றனர். ஏற்கனவே பெலகாவியின் சாம்ரா விமான நிலையத்தில் இருந்து, ஸ்டார் ஏர் நிறுவனத்தின் ஜோத்பூர், சூரத், இந்துார், நாசிக் இடையிலான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.