உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புல்லட் ரயில் தயாரிக்க பி.இ.எம்.எல்., ஒப்பந்தம்

புல்லட் ரயில் தயாரிக்க பி.இ.எம்.எல்., ஒப்பந்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்காடு: நாட்டின் முதல் புல்லட் ரயில் தயாரிக்கும் ஒப்பந்தத்தை, பி.இ.எம்.எல்., நிறுவனம் பெற்றுள்ளது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோட்டில் பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பி.இ.எம்.எல்.,) நிறுவனம் செயல்படுகிறது. பெங்களூரு, மைசூரு, கோளார்கனி ஆகிய இடங்களில் இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் உள்ளன.ஏராளமான மெமு ரயில் பெட்டிகள், பாசஞ்சர் ரயில் பெட்டிகள், ரயில் உபகரணங்களும் பாதுகாப்பு துறைக்கான உபகரணங்களும் தயாரித்து வரும் இந்த நிறுவனம், நாட்டின் முதல் புல்லட் ரயிலை தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

பி.இ.எம்.எல்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வெளிநாட்டு நிறுவனங்களை தோற்கடித்து, உலகளாவிய டெண்டரில், இந்தியாவில் முதல் முறையாக, ரயில்வேயின் மும்பை - -அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் தயாரிக்கும் ஒப்பந்தத்தை பி.இ.எம்.எல்., பெற்றுள்ளது.புல்லட் ரயில் தயாரிப்பு பணிகள் முடித்து, 2026ல் ரயில்வேக்கு அளிக்கப்பட வேண்டும். எங்கு புல்லட் ரயில் தயாரிப்பது என்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. பாலக்காடு, கஞ்சிக்கோட்டில் தான், புல்லட் ரயில் தயாரிப்படும் என, எதிர்பார்க்கிறோம்.இங்கு தான், ஏராளமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளிவரும். எட்டு பெட்டிகள் கொண்ட இரண்டு புல்லட் ரயில்கள் தயாரிக்க ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது. மணிக்கு, 250 கி.மீ., முதல் 280 கி.மீ., வேகத்தில் இந்த புல்லட் ரயில் இயங்கும்.ஒரு புல்லட் ரயில் தயாரிக்க, சுமார், 200 முதல் 250 கோடி ரூபாய் வரை செலவு எதிர்பார்க்கப்படுகிறது.புல்லட் ரயிலை வெளி நாடுகளில் இருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கிடையில், பி.இ.எம்.எல்., வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டியை பாதி விலையில் உலகத் தரத்தில் தயாரித்து வழங்கியதால், இந்நிறுவனத்துக்கு புல்லட் ரயில் வாய்ப்பு கிடைத்துள்ளது.கடந்த மாதம், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், இந்திய ரயில்வேக்காக பி.இ.எம்.எல்., பெங்களூரு ஆலையில் வடிவமைத்து தயாரித்து வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ கார்ப்பரேஷனுக்காக, 210 மெட்ரோ பெட்டிகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தையும் இம்மாதம் நிறுவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 24, 2024 14:52

முதலீடுகளை ஈர்க்கிறேன் என்று அமெரிக்கா ஸ்பெயின் என்று உலகம் சுற்றாமல் மத்திய அரசுடன் இணக்கமான சூழல் உருவாக்கி மத்திய அரசின் ஆர்டர்கள் ஈர்த்தாலே போதும் ஏகப்பட்ட அலைகள் இயங்கும். கேரளா புத்திசாலி தனமாக செயல்பட்டு தொழில்களை விரிவு படுத்துகிறது. தமிழக அரசு சாராயம் விற்று பணம் கல்லா காட்டுகிறது. சாராய வியாபாரம் விளம்பரம் செய்ய துணை கட்சியை வைத்து மாநாடு என்ற பெயரில் அனைவரையும் பேசிச் செய்து டாஸ்மாக் விளம்பரம் செய்து கொள்கிறது. இதற்கு வேறு துணை முதலமைச்சர் என்ற பெயரில் மற்றொரு சுய விளம்பரம். மகன் நிபந்தனை விதிக்கிறாராம் அப்பா சமாதானம் செய்கிறாராம் கருணாநிதி விட ஸ்டாலின் சூப்பராக ஆட்சி செய்கிறாராம். சர்டிபிகேட் வேறு. இந்த துணை முதலமைச்சர் இல்லாமல் தான் தமிழகம் பின் தங்கி இருந்தது. இனி வெகுவாக முன்னேறி அமெரிக்காவுக்கு முன்னோடியாக இருக்கும். எப்பொழுது திரு.உதயநிதி ஸ்டாலின் உள்ளே வந்தாரோ அப்போதே முடிவானது தானே இந்த துணை முதலமைச்சர் பதவி. சென்ற சட்ட சபை தேர்தல் போதே நான் கூறியிருந்தேன் இளவரசர் துணை முதலமைச்சர் கமல்ஹாசன் திமுக பி டீம் வோட்டுகளை பிரிக்கவே கமல்ஹாசன் என்டிரி திமுகவோடு இணைந்து விடுவார் என்று. இப்போதும் கூறுகிறேன் கமல்ஹாசன் திமுகவோடு இணைந்த பின்னர் வெற்றிடமான பி டீம் இடத்தை நிரப்புத்தான் விஜயின் தவெக. தவெகவும் அடுத்த பாராளுமன்ற தேர்தல் பின்னர் திமுகவோடு ஐக்கியம் ஆகிவிடும்.


sundar
செப் 24, 2024 10:18

I am proud to say my company which worked till retirement has bagged the orders for manufacturing bullet trains to INDIAN RAILWAYS to run on Mumbai -Ahmedabad section.


Dharmavaan
செப் 24, 2024 07:28

மோடியின் சாதனை விளம்பரப்படுத்தப்பட வேண்டும்


Kasimani Baskaran
செப் 24, 2024 05:23

சூப்பர். அரசு துறை நிறுவனம் ஒன்று இது போல சர்வதேச போட்டிகளுக்கு இடையில் ஒப்பந்தம் போடுவது சாதனை. இதில் எப்படி லேபல் ஒட்டலாம் என்று தமிழக தீம்க்கா அரசு நிபுணர்களுடன் ஆலோசனை.


A Viswanathan
செப் 24, 2024 08:39

super


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை