| ADDED : அக் 06, 2024 06:28 AM
பெங்களூரு: தேவனஹள்ளி ரயில் நிலையத்தில் இருந்து, கன்டோன்மென்ட் ரயில் நிலையம் வரை நடக்கும் ரயில்வே பணிகளை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.அதன் பின், அவர் அளித்த பேட்டி:கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எலஹங்கா வரை ரயில்வே பாதை அமைக்கப்படும். பெங்களூரின் கன்டோன்மென்ட் மிகவும் முக்கியமான ரயில் நிலையமாகும். கன்டோன்மென்ட், யஷ்வந்த்பூர் ரயில் நிலையங்கள் மறு கட்டமைப்பு செய்யும் பணி நடக்கிறது.கூடுதல் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. 'அண்டர் கிரவுண்ட்' பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. டிசம்பரில் பணிகள் முடிவடையும்.மைசூரு - பெங்களூரு இடையே, நமோ ராபிட் ரயில் இயக்கப்படுகிறது. தற்போது துமகூரு - பெங்களூரு இடையே, ராபிட் ரயில் போக்குவரத்தை துவக்குவோம். பெங்களூரு நகரில் இருந்து, 200 கி.மீ., தொலைவில் உள்ள முக்கியமான நகரங்களுக்கு, நமோ ராபிட் ரயில் போக்குவரத்து துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, மோகன் எம்.பி., உட்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.