உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னையில் விசாரணை

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னையில் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு முக்கிய குற்றவாளிகளை சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து வந்து, என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கர்நாடக மாநிலம் பெங்களூரில், ‛ராமேஸ்வரம் கபே' என்ற ஹோட்டலில் மார்ச் 1ல் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான முஸாவிர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மதீன் தாஹா ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், குண்டுவெடிப்புக்கு முன்னர் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் வந்து தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில், முக்கிய குற்றவாளிகளை இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அங்குள்ள ஒரு லாட்ஜ் மற்றும் பழைய கட்டடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SureshKumar Dakshinamurthy
ஏப் 28, 2024 10:18

dmk தீவிரவாதிகளின் காவலன் ராமலிங்கம் கொலையாளிகள், போதை மருந்து தயாரிக்கும் ஜாபர் செட் போன்றோர் தீமுகாவின் பாதுகாப்பில் தான் உள்ளனர்


subramanian
ஏப் 27, 2024 22:08

திமுக ஆட்சி தேசவிரோதிகளுக்கு ஆதரவு தளம்


பேசும் தமிழன்
ஏப் 27, 2024 18:19

நாட்டில் எங்கே குண்டு வெடித்தாலும் .....அதன் தொடர்பு ....தமிழகத்தில் இருப்பது எப்படி ???..... இங்கே தீவிரவாதிகள் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கிறார்கள் போல ???


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ