வாசகர்கள் கருத்துகள் ( 1 )
"-எப்படி கருத்து போடறது....
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஹோட்டல் அறையில் பெங்களூரு தொழிலதிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ராஜஸ்தானைச் சேர்ந்த நிலேஷ் பண்டாரி, பெங்களூருவில் வசித்து வந்தார். அவர், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெண் நண்பருடன் லக்னோவில் ஹோட்டலுக்குச் சென்றார். இந்நிலையில் நேற்று அவர், ஹோட்டல் அறையில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார். இறந்த சம்பவம் குறித்து ஹோட்டல் நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. புகாரின் பேரின் போலீசார் சம்பவம் நடந்த அறைக்கு சென்று நிர்வாண நிலையில் காணப்பட்ட சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு மண்டலம்) பங்கஜ் சிங் கூறியதாவது:முதற்கட்ட விசாரணையில் உடலில் எந்த காயமும் இல்லை. இறந்தவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய ஆதாரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன. விசாரணையின் ஒரு பகுதியாக ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடக்கிறது. மரணத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால், விரைவில் விபரங்கள் கிடைத்துவிடும்.இவ்வாறு பங்கஜ் சிங் கூறினார்.
"-எப்படி கருத்து போடறது....